தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்களுக்கு தட்டுப்பாடு..? 3 மாதங்களாக இதே நிலைமை தான்..!! பொதுமக்கள் அதிர்ச்சி..!!
தமிழ்நாடு முழுவதும் கடந்த 3 மாதங்களாக ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு அரிசி விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர மானிய விலையில் கோதுமை, சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றனர். அரிசி அட்டைதாரர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள் என இரண்டு வகையாக ரேஷன் அட்டைகள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த 3 மாதங்களாக ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முதலில் மே மாதம் துவரம் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்டது. பின்னர் அம்மாதத்திற்கான பொருட்கள் ஜூன் மாதம் வழங்கப்பட்டது. தற்போது ஜூலை மாதம் வந்துவிட்ட நிலையில், ஜூன் மாதத்திற்கான பொருட்களே வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. விநியோகம் சீராகாத காரணத்தினால், முழுவதுமாக பொருட்களை வழங்க இயலவில்லை என கூறப்படுகிறது.
Read More : இனி ஒரே டிக்கெட்..!! பேருந்து, மெட்ரோ, மின்சார ரயிலில் பயணிக்கலாம்..!! தமிழ்நாடு அரசின் சூப்பர் பிளான்..!!