முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உஷார்!! அடிக்கடி ஷாப்பிங் செய்பவரா நீங்கள்? 'ஷாப்பிங் டிஸார்டர்' என்ற மன நோய்க்கு வித்திடும்!!

Some people see any product and think they have to buy it even if they don't need it. The English name of that severe depression is 'Compulsive Buying Disorder'. It is a type of mood disorder.
08:52 AM Jul 01, 2024 IST | Mari Thangam
Advertisement

புது உடைகளும் பொருட்களும் எப்போதுமே மனதிற்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் அளிப்பவை. ஷாப்பிங் செய்வது எல்லோருக்குமே மிகப் பிடித்தமான விஷயம், குறிப்பாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும். 'ஷாப்பிங்'. அதனை சிறந்த பொழுதுபோக்காக கொண்டாடவும் செய்வார்கள். அதிலும் வீட்டுக்குள்ளேயே முடங்கி வெளி உலக தொடர்பு இல்லாமல் வாழும் பெண்களுக்கு வெளியே சென்று வருவதற்கான வாய்ப்பை ஷாப்பிங்தான் ஏற்படுத்திக்கொடுக்கும். மனதுக்கு பிடித்தமான பொருளை வாங்க செல்வதாக இருந்தால் இன்னும் குஷியாகிவிடுவார்கள்.

Advertisement

சிலர் எந்தப் பொருளைப் பார்த்தாலும், அது அவர்களுக்கு தேவையே இல்லை என்ற போதும் அதை வாங்கியே ஆகவேண்டும் என்று நினைப்பர். அந்தத் தீவிர மனஅழுத்தத்தின் ஆங்கிலத்தில் ‘கம்பெல்சிவ் பையிங் டிஸ்ஆர்டர்’ (Compulsive buying disorder (CBD) என்று பெயர். அதாவது ஒரு வகை மனநிலை கோளாறு ஆகும். தேவை அறிந்து பொருட்களை வாங்குவது வேறு. அவசியமின்றி பொருட்களை வாங்குவது வேறு. இவை இரண்டுக்கும் இடையே நிறைய வித்தியாசம் இருக்கிறது. அதனை கருத்தில் கொள்ளாமல் ஏற்படும் 'ஷாப்பிங் டிஸார்டர்' எனப்படும் மனநிலை கோளாறு ஆண்களை விட பெண்களைத்தான் அதிகம் பாதிக்கும். குறிப்பிட்ட பொருட்கள் மீது அலாதி பிரியம் கொள்வது அதற்கு காரணமாக இருக்கலாம்.

ஷாப்பிங் டிஸார்டர் அறிகுறிகள் ;

மேலும் அவரை உணர்வுரீதியான பிரச்சனைகளையும் எதிர்கொள்ளச் செய்கிறது. இவர்களுக்கு தகுந்த சிகிச்சையளித்து சரிப்படுத்த வேண்டும். மனதிற்கு உற்சாகம் அளிக்கும் செரோடொனின் அதிகமுள்ள பாதாம்பருப்பு, சோயா, அன்னாசி மற்றும் வாழைப்பழங்களை உட்கொள்ள வேண்டும். மேலும் தினமும் அரைமணிநேரம் நடைபயிற்சியில் ஈடுபடவேண்டும் என அறிவுறுத்துகிறார்கள் மனநல ஆலோசகர்கள்.

Read more ; மகாராஜா பட நடிகைக்கு இப்படியொரு நோயா? கையை பாத்தீங்களா! லேட்டஸ்ட் போட்டோவால் ரசிகர்கள் ஷாக்!

Tags :
mental illnessSHOPPINGShopping disorder
Advertisement
Next Article