பரம எதிரியான இந்தியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது பாராட்டுக்குரியது!... சர்ச்சை பேச்சு!
Pakistan Army: இந்தியா எங்களுக்கு பரம எதிரி என பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அசிம் முனிர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கைபர் பக்துன்க்வாவின் ரிசல்பூரில் உள்ள அஸ்கர் கான் அகாடமியில் பாகிஸ்தான் விமானப்படையின் பாஸிங் அவுட் அணிவகுப்பு இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அந்நாட்டு ராணுவ தலைமை தளபதி அசீம் முனீர் சிறப்பு உரையாற்றினார். அப்போது இந்தியாவை தாக்கி பேசிய அசீம் முனிர், காஷ்மீர் மற்றும் 2019 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவிய சூழல் குறித்தும் குறிப்பிட்டு பேசினார்.
அதாவது தார்மீக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மற்றும் ராஜதந்திர ரீதியாகவும் காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று கூறியுள்ளார். மேலும் இந்தியா தான் தங்களுடைய பரம எதிரி என்றும் ஆவேசமாக கூறியுள்ளார் அசீம் முனீர். அதுமட்டுமின்றி அந்நாட்டு நீதித்துறையையும் சாடியுள்ளார்.
மேலும் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் அரசியலமைப்பின் 19 ஆவது பிரிவு பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரத்தின் வரம்புகளை தெளிவாக வரையறுக்கிறது என்றும் அவர் தலைமை நீதிபதிக்கு பதில் அளித்தார். தொடர்ந்து பேசிய ராணுவ தலைமை தளபதி அசீம் முனீர், 2019 ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதை பாராட்டினார்.
தற்போது இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி இந்தியா தங்களின் பரம எதிரி என கூறியிருப்பது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் அமைதி ஏற்படுமா என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதியின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Readmore: நாளைமுதல் “அக்னி நட்சத்திரம்” தொடக்கம்!… வெயில் கோர தாண்டவம் ஆடும் மாவட்டங்கள் லிஸ்ட்!