For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

படப்பிடிப்பில் விபத்து!. 'தி லெஜண்ட்' ஹீரோயின் ஊர்வசி ரவுதலா படுகாயம்!

Shooting accident! 'The Legend' Heroine Urvashi Rauthala injury
06:15 AM Jul 10, 2024 IST | Kokila
படப்பிடிப்பில் விபத்து    தி லெஜண்ட்  ஹீரோயின் ஊர்வசி ரவுதலா படுகாயம்
Advertisement

Urvashi Rauthala: படப்பிடிப்பின்போது நிகழ்ந்த விபத்தில் தி லெஜண்ட் திரைப்பட நடிகையும் பாலிவுட் கவர்ச்சி நடிகையுமான ஊர்வசி ரவுதலா, படுகாயமடைந்துள்ளார்.

Advertisement

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் நடித்துள்ள படம், ’தி லெஜண்ட்’. இந்த படத்தின் மூலம் ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் அவர் அறிமுகமானார். இந்த படத்தில் பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவுதலா ஹீரோயினாக நடித்துள்ளார். கவர்ச்சி நடிகையாக வலம் வரும் ஊர்வசி ரவ்துலா (Urvashi Rautela), சமூக வலைதளங்களில் செம்ம ஆக்டிவாக இயங்கி வருகிறார். அதில் இவர் வெளியிடும் கிளாமர் புகைப்படங்களை காண்பதற்கென ஏராளமான ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.

இந்தநிலையில், ஊர்வசி ரவுதலா, தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் NBK 109 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். படம் தொடர்பான சண்டைக் காட்சியில் நடித்துக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Readmore: பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது!. அதிபர் புதின் கவுரவிப்பு!. எனது நாட்டு மக்களுக்கு கிடைத்த கவுரவம் என பெருமிதம்!

Tags :
Advertisement