அதிர்ச்சி..!! ஆன்லைனில் விநாயகரின் உருவம் பதிக்கப்பட்ட காலணிகள், உள்ளாடைகள் விற்பனை..!! கொந்தளிக்கும் மக்கள்..!!
ஆன்லைன் தளத்தில் இந்து கடவுளான விநாயகரின் உருவம் பதிக்கப்பட்ட காலணிகள், உள்ளாடைகள் விற்பனை செய்யப்படுவதை பொதுமக்கள் கண்டுபிடித்த நிலையில், இந்த விவகாரம் இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள வால்மார்ட் நிறுவனம் உலக புகழ்பெற்ற ஒரு ஷாப்பிங் தளமாக விளங்கி வருகிறது. உலக அளவில் அதிக ஊழியர்களை கொண்ட நிறுவனமாக தனிக்கென தனி இடத்தை பிடித்துள்ளது. வால்மார்ட்டில் சிறிய அத்தியாவசிய தேவைகள் முதல் பல பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஏராளமான பொதுமக்களும் அதில், பொருட்களை வாங்கி வருகின்றனர்.
வால்மார்ட் நிறுவனத்திற்கு கடைகள் மட்டுமன்றி, ஆன்லைன் விற்பனை தளமும் உள்ளது. அமேசான், பிளிப்கார்ட் போல வால்மார்ட் நிறுவனத்திற்கும் மொபைல் செயலி உள்ளது. இந்நிலையில், அந்த செயலியின் மூலம் தான் ஒரு அதிர்ச்சியூட்டிம் விவகாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த செயலியில் லட்சக்கணக்கான பொருட்கள் விற்பனை செய்யப்படும் நிலையில், விநாயகர் புகைப்படம் பதிவிடப்பட்ட உள்ளாடைகள் மற்றும் காலணிகள் விற்பனை செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில், பெண்கள் அணியும் உள்ளாடைகள், ஆண்கள் பேண்ட், டிரவுசர் மற்றும் சில வகையான உடைகளில் விநாயகர் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை, வால்மார்ட் நிறுவனம் 33.99 டலருக்கு விற்பனை செய்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : மீண்டும் ஆரோக்கிய உணவை நாடும் மக்கள்..!! 2024இல் அதிகம் சாப்பிட்ட உணவுகளின் பட்டியல் இதோ..!!