முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அதிர்ச்சி ரிப்போர்ட்..!! வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் சென்னை..!! மக்களே பாதுகாப்பா இருங்க..!!

08:54 AM Nov 06, 2023 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் இன்னுமே பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் ஆபத்து இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. முன்பெல்லாம் மழை பெய்தாலே நகரில் தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது. ஆனால், இப்போது சென்னையில் நிலைமை எவ்வளவோ பரவாயில்லை என்று சொல்லலாம்.

இருப்பினும், பெருநகர சென்னையின் முக்கிய சாலைகள், நெடுஞ்சாலைகளில் இன்னுமே சுமார் 50.6% வெள்ள அபாயத்தில் இருப்பதாக உலக வங்கி உதவியுடன் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்படும் இடங்களைக் கண்டறிந்து அவற்றை eco-zones ஆகச் சென்னை மாநகராட்சி பட்டியலிட்டு வருகிறது. இந்த பகுதிகளில் வெள்ள அபாயத்தைக் குறைக்கும் வகையில் புதிய கட்டுமானங்கள் ஊக்குவிக்கப்படாது.

சென்னையின் 3-வது வளர்ச்சி பிளான் குறித்த ஆவணம் தயாரிக்கும் கூட்டத்தில், சென்னை மாநகராட்சி, பொதுப்பணித்துறை மற்றும் சென்னை நதிகள் சீரமைப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர். 2022இல் உலக வங்கி நிதியுதவியுடன் நடத்தப்பட்ட ஆய்வில் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய முக்கியமான சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளை அடையாளம் காண உதவியதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

அதில் தான் 50% arterial சாலைகள் ஆபத்தில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது மாங்காடு அருகே உள்ள வெளிவட்டச் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் ஆபத்து இருக்கிறது. இதனால் எண்ணூர் துறைமுகத்திற்கான சரக்கு போக்குவரத்து பாதிக்கப்படும். மேலும், அடையாறு படுகை, கூவம் படுகை மற்றும் கோவளம் படுகையில் உள்ள சாலைகளிலும் வெள்ள அபாயம் இருப்பதையும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

அதீத கனமழைக்கும் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்திற்கும் பருவநிலை மாற்றமும் முக்கிய காரணம் என்பதில் சந்தேகமே இல்லை. எனவே, தற்போது இருக்கும் சூழலுக்கு ஏற்ப மழைநீர் வடிகால்களையும் திட்டமிட வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.

Tags :
கனமழைசென்னைதமிழ்நாடுதமிழ்நாடு அரசுவடகிழக்கு பருவமழை
Advertisement
Next Article