முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அதிர்ச்சி!… த்ரில்லுக்காக இளம்பெண்ணுக்கு போதை ஊசி செலுத்திய நபர்!… கடைசியில் நேர்ந்த பரிதாபம்!

06:34 AM Apr 11, 2024 IST | Kokila
Advertisement

Drug: த்ரில்லுக்காக போதை ஊசி செலுத்தப்பட்ட 18 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள நியூ ஹைதராபாத் பாரபங்கி நகரை சேர்ந்தவர் விவேக் மவுரியா (28). இவரது வீட்டில் 18 வயது இளம்பெண் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். விவேக் போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. அவர் மூலம் அந்த பெண்ணுக்கும் அந்த பழக்கம் வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 7ம் தேதி பெங்களூருவுக்கு ரயிலில் செல்வதற்காக இளம்பெண் மகாநகர் வீட்டில் இருந்து புறப்பட்டார். விவேக் அவரை திவாரிகஞ்சில் உள்ள ஒரு நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவருக்கு போதை ஊசி போட்டுள்ளார். அப்போது விவேக்கும் போதையில் இருந்துள்ளார். அதிகப்படியான போதைப்பொருளால் பாதிக்கப்பட்ட இளம்பெண் அவசர எண்ணிற்கு அழைத்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், போதையில் இருந்த இளம்பெண் மற்றும் விவேக் ஆகியோரை மீட்டு ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இசிஜி பரிசோதனைக்கு பிறகு இளம்பெண் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உயிரிழந்த இளம்பெண்ணி தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விவேக் மவுரியாவை கைது செய்தனர். மேலும் போதை மருந்து கொடுத்தால் என்னவாகும் என்ற த்ரில்லுக்காக இளம்பெண்ணுக்கு அளவுக்கு அதிகமாக மருந்தை கொடுத்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. முதலில் ஊசி போட்டுக் கொண்ட அவர், பின்னர் இளம்பெண்ணுக்கு ஊசி போட்டதாக போலீஸார் தெரிவித்தனர். விவேக் மீது முதலில் ஐபிசி பிரிவு 304 (கொலைக்கு சமமான குற்றமான கொலை) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Readmore: நோட்டா உடன் போட்டி போடும் கட்சி பாஜக…! கடுமையாக விமர்சனம் செய்த முதல்வர் ஸ்டாலின்…!

Advertisement
Next Article