முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மக்களே உஷார்..!! 6,744 பேருக்கு அம்மை பாதிப்பு..!! சுகாதாரத்துறை முக்கிய எச்சரிக்கை..!!

01:47 PM Mar 18, 2024 IST | 1newsnationuser6
Advertisement

கேரளாவில் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்து வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அம்மாநிலத்தில் அம்மை நோய் பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்த வண்ணம் உள்ளன. அதன்படி, கடந்த 75 நாட்களில் 6,744 பேருக்கு அம்மை நோய் பாதிப்பு பதிவாகி உள்ளதாகவும், குழந்தைகள் உட்பட 9 பேர் பலியாகி உள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

கடந்தாண்டு கேரளாவில் மொத்தம் 26,363 பேருக்கு அம்மை நோய் பாதிப்பு உறுதியானது. இதில், 4 பேர் உயிரிழந்தனர். கேரளாவின் இந்திய மருத்துவ சங்கத்தின் ஆராய்ச்சி பிரிவின் தலைவர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன் கூறுகையில், “வெப்பநிலை அதிகரிப்பதால், நோய் பாதிப்பு வாய்ப்புகள் அதிகம். பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொள்வதன் மூலம் மற்ற நபருக்கு இந்த நோய் பரவுகிறது. இந்த வைரஸ் காற்றின் மூலமாகவும் பரவுகிறது” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் “இந்த நோய் சில சமயங்களில் சிசுக்கள், நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆபத்தானதாக இருக்கலாம். சில சந்தர்ப்பங்களில் மரணத்திற்கு கூட வழிவகுக்கும். எனவே, தடுப்பு நடவடிக்கைகள் முக்கியமானது” என்று கூறினார். மேலும், அனைத்து தோல் புண்களும் குணமாகும் வரை நோயாளிகள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலம் நோய் பரவுவதைத் தடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

அம்மை நோய் அறிகுறிகள்

நோயாளி உடல் வலி, சோர்வு மற்றும் பசியின்மை ஆகியவற்றை அனுபவிக்கலாம். முதலில் தலை மற்றும் வாயில் சிறிய கொப்புளங்கள் தோன்றும். பின்னர் அவை மார்பு மற்றும் பிற உடல் பாகங்களில் தோன்றும்.

சிகிச்சை

* அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சுகாதார நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து சிகிச்சை பெற வேண்டும்.

* மற்றவர்களுடன் தொடர்பைத் தவிர்க்கவும், சுத்தமான மற்றும் காற்றோட்டமான அறையில் தங்க வேண்டும்.

* இருமல் மற்றும் தும்மலின் போது வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ளவும்.

* சத்தான உணவை சாப்பிட வேண்டும்.

* சுய சிகிச்சையைத் தவிர்த்து, மருத்துவர்களின் அறிவுறுத்தல்களின்படி மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

Read More : Post office | 250 ஆண்டுகளை நிறைவு செய்த இந்தியாவின் முதல் தபால் நிலையம்..!! எங்கு இருக்கு தெரியுமா..?

Advertisement
Next Article