முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஷாக்கிங் நியூஸ்..!! அரசியலில் இருந்து விலகுகிறார் விஜயகாந்த்..? இனி முழு பொறுப்பு பிரேமலதா வசம்..!!

11:36 AM Nov 18, 2023 IST | 1newsnationuser6
Advertisement

ஸ்டைலால் ரஜினியும், ஜனரஞ்சக நடிப்பால் கமலும் தமிழ்த்திரை உலகில் பல ரசிகர்களைக் கொண்டிருந்த நேரத்தில் இயல்பான நடிப்பாலும் பேச்சாலும், சமூகக் கருத்துகளாலும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் தான் விஜயகாந்த். நுழைந்த சில வருடங்களிலேயே வெளிப்படையானவர், வெள்ளந்தி மனிதர், உதவும் குணம் உடையவர் என மற்ற நடிகர்களிடமிருந்து தனித்த அடையாளமானார் விஜயகாந்த்.

Advertisement

நடிக்க ஆரம்பித்த வெகு சில காலத்திலேயே அவரின் நெருங்கிய நண்பர்களால் அவர் பெயரில், ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டன. இலவச தையல் மெஷின் வழங்குவது, மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனங்கள் கொடுப்பது, இலவசத் திருமணங்கள் நடத்தி வைப்பது, ஆண்டுதோறும் தன் சொந்தப் பணத்தில் கல்வி உதவிக்கென 25 லட்ச ரூபாய் ஒதுக்குவது எனத் தனி சேவை சாம்ராஜ்யத்தையே நடத்தி வந்தார்.

அரசியல் நோக்கத்தோடு இவை எல்லாவற்றையும் செய்யாவிட்டாலும்கூட, ஒரு கட்டத்தில் அரசியலுக்கு வந்து இவற்றை எல்லாம் ஏன் செய்யக்கூடாது என நினைக்கத் தொடங்கினார் விஜயகாந்த். அதற்குக் காரணமாய் அமைந்தது தன் மன்ற நிர்வாகிகளுக்கு அரசியல் கட்சிகளும் ஆளும் அரசின் காவல்துறையும் கொடுத்த நெருக்கடிகள்தான் என தன் அரசியல் வருகைக்கு அறிமுகமும் தந்தார் நடிகர் விஜயகாந்த். 2000ஆம் ஆண்டிலேயே, தன் மன்றத்துக்கென, தனிக்கொடியை உருவாக்கினார் விஜயகாந்த்.

ஆனால், தற்போது உடல்நலக்குறைவு காரணமாக கட்சிப் பணிகளில் பங்கேற்பதில்லை. வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார். இதற்கிடையே, நாடாளுமன்ற தேர்தலும் விரைவில் வரவுள்ளதால், தேமுதிமுகவை வலுப்படுத்தும் பணியில் அவரது மனைவி பிரேமலதா ஈடுபட்டுள்ளார். விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாததால், அடுத்தக்கட்ட தலைவரை தேர்ந்தெடுக்க விரைவில் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.

இதில் கட்சி தொடர்பாக முடிவு எடுக்கும் அனைத்து அதிகாரத்துடன் பிரேமலதாவுக்கு செயல் தலைவர் பதவியும், மகன் விஜய பிரபாகரனுக்கு மாநில இளைஞரணி செயலாளர் பதவியும் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Tags :
அரசியல்பிரேமலதா விஜயகாந்த்விஜயகாந்த்
Advertisement
Next Article