For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

#BREAKING: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி உடல்நலக்குறையால் காலமானார்.! அதிர்ச்சியில் திரையுலகினர்.!

09:11 PM Jan 25, 2024 IST | 1newsnationuser7
 breaking  இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி உடல்நலக்குறையால் காலமானார்   அதிர்ச்சியில் திரையுலகினர்
Advertisement

இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் மகளும் கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான பவதாரணி இளையராஜா கல்லீரல் புற்றுநோய் காரணமாக மரணம் அடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. அவரது உடல் நாளை சென்னை கொண்டுவரப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement

1984 ஆம் வருடம் வெளியான மைடியர் குட்டிச்சாத்தான் என்ற திரைப்படத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் பவதாரணி. 2000 ஆண்டில் தமிழில் வெளியான பாரதி திரைப்படத்தில் இவர் பாடிய மயில் போல பொண்ணு ஒண்ணு பாடலுக்காக தேசிய விருது பெற்றார். மேலும் தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் பின்னணி இசை அமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு இவருக்கு புற்று நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இவரது உடல் நாளை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags :
Advertisement