For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வாகன ஓட்டிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்..!! கட்டணம் அதிரடியாக உயருகிறது..!! வெளியான திடீர் அறிவிப்பு..!!

08:27 AM Apr 24, 2024 IST | Chella
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்     கட்டணம் அதிரடியாக உயருகிறது     வெளியான திடீர் அறிவிப்பு
Advertisement

சென்னையில் 2015 முதல் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று மெட்ரோ ரயில் இயங்கி, பொது போக்குவரத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் சேவை, 2 வழித்தடங்களில் 54 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயன்பாட்டில் உள்ளது. பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisement

இந்தப் பணிகளை 2026 இறுதிக்குள் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இங்கு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை எத்தனை மணி நேரம் நிறுத்தி வைக்கிறோம் என்பதன் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், மாத கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் அல்லாதவர்களும் கூட வாகனங்களை அங்கு நிறுத்திச் செல்கின்றனர். அவர்களுக்கான கட்டணம் இன்னும் சில வாரங்களில் உயர்த்தப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாக அதிகாரி கூறுகையில், ”மக்களிடையே அதிக வரவேற்பு பெற்று வருவதால் மெட்ரோ ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. பார்க்கிங் பகுதியில் இடநெருக்கடியால் ஊழியர்களுக்கும் பயணிகளுக்கும் தினமும் வாக்குவாதம் ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது.

பெரும்பாலான நிலையங்களின் அளவைப் பொறுத்து பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால், பயணம் செய்பவர்களை தவிர பிறர் தங்களின் வாகனங்களை குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பாக நிறுத்துவதற்காக மெட்ரோ ரயில் நிலையங்களை பயன்படுத்தி வருகின்றனர். விமான நிலையம், மீனம்பாக்கம், அண்ணாநகர் டவர், திருமங்கலம், அண்ணாநகர் கிழக்கு, டோல்கேட், நங்கநல்லூர் போன்ற நிலையங்களின் பார்க்கிங்கில் வேலை நேரங்களில் வாகனங்கள் நிறுத்தும் இடம் கிடைப்பதில்லை.

இதனால் மெட்ரோ ரயில் பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பயணிகள் அல்லாத வாகனங்களுக்கு இன்னும் சில வாரங்களில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. தற்போது பயணிகளின் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10, பயணிகள் அல்லாதவர்களுக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் இன்னும் சில வாரங்களில் உயர்த்தப்பட கூடும்” என்று தெரிவித்தார்.

Read More : தீயாய் பரவும் பறவைக் காய்ச்சல்..!! தமிழக எல்லைகளில் தீவிர சோதனை..!! உங்களுக்கு இந்த அறிகுறி இருக்கா..?

Advertisement