For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

IPL 2024: சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி.!! அணியில் இருந்து திடீரென விலகிய முக்கிய வீரர்.!!

08:39 PM Apr 07, 2024 IST | Mohisha
ipl 2024  சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி    அணியில் இருந்து திடீரென விலகிய முக்கிய வீரர்
Advertisement

IPL 2024: நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர் விலகி இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி சென்னை அணிகின்ற ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

2024 ஆம் வருட ஐபிஎல் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது . 20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் நாலு வெற்றிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் இடத்திலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன. நடப்புச் சாம்பியன் சிஎஸ்கே அணி 2 வெற்றிகள் உடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்த வருட ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கிய சிஎஸ்கே அணி அதன் பிறகு டெல்லி கேப்பிட்டல் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுடன் 2 தோல்விகள் பெற்று ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியான செய்தி வெளியாகியிருக்கிறது.

சென்னை அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளரான மதிஷா பத்திரானா அடுத்த போட்டியிலும் விளையாட மாட்டார் என பந்து வீச்சு பயிற்சியாளர் எரிக் சிம்சன் தெரிவித்துள்ளார். குட்டி மலிகா என அழைக்கப்படும் இவர் கடந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக தனது துல்லியமான யார்க்கர்கள் மூலம் டெத் ஓவர்களில் எதிரணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தியதோடு விக்கெட்டுகளும் வீழ்த்தி சென்னை அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.

இந்த வருட ஐபிஎல் தொடருக்கு முன்பாக அவருக்கு ஏற்பட்ட காயத்தை தொடர்ந்து முதல் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. சிஎஸ்கே அணி விளையாடிய இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் பங்கேற்ற பத்திரானா ஹைதராபாத் அணியுடன் விளையாடிய போட்டியிலும் காயம் காரணமாக வெளியேறினார்.

தற்போது அவருக்கு ஏற்பட்ட காயம் முழுமையாக குணமடையாததால் நாளை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பணிவுடன் ஆன போட்டியிலும் மதீஷா பத்திரானா பங்கேற்க மாட்டார் என பயிற்சியாளர் அறிவித்திருக்கிறார். இது சென்னை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேகேஆர் அணி தனது மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று சிறப்பான ஃபார்முடன் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More: Election 2024 | திமுகவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய காங்கிரஸ்.!! கலக்கத்தில் கூட்டணி கட்சிகள்.!!

Advertisement