For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஷாக்கிங் நியூஸ்..!! தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்புகளுக்கான கட்டணம் உயருகிறது..?

10:12 AM Apr 09, 2024 IST | Chella
ஷாக்கிங் நியூஸ்     தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்புகளுக்கான கட்டணம் உயருகிறது
Advertisement

தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்புகள், துணை மருத்துவப் படிப்புகள் மற்றும் கல்வியியல் படிப்புகளுக்கான கட்டணங்கள் உயரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

உயர்க்கல்வி படிப்புகளான மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் போன்றவற்றுக்கு கட்டணம் நிர்ணயம் செய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தமிழ்நாடு அரசால் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவிடம் தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் கல்வி கட்டணம் உயர்வு குறித்த விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 3 வகையான உயர்கல்வி படிப்புகளுக்கு புதிய கட்டணங்களை நிர்ணயம் செய்வதற்காக விண்ணப்பங்களை இந்த குழு பெற்றுள்ளது. அதில், பி.இ., பி.டெக், போன்ற பொறியியல் படிப்புகள், பாரா மெடிக்கல் எனப்படும் 17 வகையான துணை மருத்துவப் படிப்புகள், இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை நடத்தும் கல்லூரிகள் கட்டண உயர்வு குறித்த விண்ணப்பங்களை அளித்துள்ளன.

இதில், பொறியியல் படிப்புகளை நடத்தும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரி நிர்வாகங்கள், 25% வரை கட்டண உயர்வுக்கு கோரிக்கை வைத்துள்ளன. அதன்படி, நடப்பு கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்புகள், துணை மருத்துவப் படிப்புகள் மற்றும் கல்வியியல் படிப்புகளுக்கான கட்டணங்கள் உயரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பொறியியல் படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.50,000 எனவும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் 85 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளன.

இதில் 25% வரை உயர்வு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. புதிதாக மாற்றி அமைக்கப்படும் புதிய கல்விக் கட்டணம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும். அப்படி நடைமுறைக்கு வரும் புதிய கல்விக் கட்டணம் அடுத்த 3 கல்வி ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Read More : ’சொந்த மகளா இருந்தாலும் பிரச்சாரம் செய்ய முடியாது’..!! வீரப்பன் மனைவி சொன்ன பதில்..!!

Advertisement