For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"அடிச்ச போதையே இறங்கிடும் போலயே.."! மது பிரியர்களுக்கு விலை உயர்வை பற்றிய திடுக் தகவல்.!

08:37 PM Jan 28, 2024 IST | 1newsnationuser7
 அடிச்ச போதையே இறங்கிடும் போலயே     மது பிரியர்களுக்கு விலை உயர்வை பற்றிய திடுக் தகவல்
Advertisement

மது பிரியர்களுக்கு, அடித்த போதையும் இறங்கும் அளவிற்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மதுபானத்தின் விற்பனை அதிகரித்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் மட்டும் கடந்த ஆண்டு ரூ.44 கோடிக்கு மேல் டாஸ்மாக்கில் மது விற்பனை நடந்துள்ளது.

Advertisement

தனியார் வசம் ஒப்படைக்கப்படாமல் அரசே ஏற்று நடத்தும் வாணிபங்களில் டாஸ்மாக்கும் ஒன்று. 43 சாதாரண வகை பிராண்டுகளையும், 128 பிரீமியம் வகை பிராண்டுகளையும், 35 பீர் வகைகளையும், 13 ஒயின் வகைகளையும் டாஸ்மார்க் கடைகள் விற்பனை செய்து வருகின்றன. இது தவிர வெளிநாட்டு மதுபானங்களும் எலைட் வகை டாஸ்மாக்குகள் மூலம் விற்கப்படுகின்றன.

இதுவரையில் குவாட்டர் பாட்டில் 130 ரூபாய்க்கும், ஹால்ஃப் பாட்டில் 260 ரூபாய்க்கும், ஃபுல் பாட்டில் 520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தன. மீடியம் ரேஞ்ச் பாட்டில்கள் 160 ரூபாய் முதல் 640 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்தன. நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் புதிய விலை உயர்வை பற்றிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன்படி புதிய விலைப்பட்டியலை, வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு கொண்டுவர டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

புதிய விலை நிலவரத்தின்படி சாதாரண மற்றும் மீடியம் ரேஞ்ச் குவாட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாயும், ஹால்ஃப் பாட்டிலுக்கு 20 ரூபாயும், ஃபுல் பாட்டிலுக்கு 40 ரூபாயும் உயர்த்தப்படும் என்று தெரிகிறது. அனைத்து வகை பீர் பாட்டில்களுக்கும் 10 ரூபாய் உயரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுபான தயாரிப்பில் பயன்படும் மூலப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளதால், மதுபான பாட்டில்களின் விலையை அதிகரிக்குமாறு, டாஸ்மாக் நிறுவனத்திடம் மதுபான ஆலையின் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதன் பொருட்டே இந்த முடிவை டாஸ்மாக் நிறுவனம் எடுத்ததாக நம்பப்படுகிறது.

மேலும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் பள்ளிக்கூடங்களுக்கு அருகே இருந்த 500 டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு மூடியது. தற்போது 4829 மதுக்கடைகள் மட்டுமே இயங்கி வருகிறது. 500 கடைகளை மூடியதால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு கட்டவும், இந்த விலை உயர்வை மேற்கொள்ளப் போவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டும் மதுபானங்களின் விலையை டாஸ்மாக் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement