For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

150 வருடங்களாக கோயிலை பாதுகாக்கும் தெய்வீக முதலை.! இந்த கோயில் எங்கு உள்ளது தெரியுமா.!?

07:06 AM Feb 08, 2024 IST | 1newsnationuser5
150 வருடங்களாக கோயிலை பாதுகாக்கும் தெய்வீக முதலை   இந்த கோயில் எங்கு உள்ளது தெரியுமா
Advertisement

கேரளாவில் அனந்தபுரா என்ற பகுதியில் அமைந்துள்ளது ஆனந்த பத்மநாதசுவாமி திருக்கோயில். இந்தியாவில் அமைந்துள்ள ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு தனி சிறப்பு இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த கோயிலுக்கு சிறப்பான விஷயமாக கருதப்படுவது 150 வருடங்களாக முதலை இந்த கோயிலை பாதுகாத்து வருவது தான்.

Advertisement

9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த சிறப்பு வாய்ந்த கோவிலை சுற்றியும் தலைவாயிலும், பச்சை பசேலென காட்சியும் அமைந்திருப்பது மனதுக்கு பிரமிப்பாக இருக்கிறது. இந்த அமைதியான சூழ்நிலையே இக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மன அமைதியையும், நிம்மதியையும் தருகிறது.

மேலும் இந்த கோயிலில் வற்றாத குளம் ஒன்று உள்ளது. அந்த குளத்தில் 150 ஆண்டுகளாக ஒரு முதலை வாழ்ந்து வருகிறது. முதலைகள் அசைவ உணவை மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்து வருபவை என்றே நாம் அறிந்து வருகிறோம். ஆனால் இந்த முதலை கோயிலில் படைக்கப்படும் பிரசாதத்தை மட்டுமே உணவாக உண்டு வாழ்ந்து வருகிறது.

இந்த முதலைக்கு முன்னதாக ஒரு முதலை கோயில் குளத்தில் இருந்துள்ளது. அந்த முதலை இறந்ததும் அடுத்ததாக ஒரு முதலை வந்து கோயிலை பாதுகாத்து வருகிறது. கோயில் குளத்தை சுற்றிலும் எந்த நீர்நிலைகளும் இல்லாத பட்சத்தில் இந்த முதலைகள் எப்படி இங்கே வருகிறது என்று யாருக்கும் தெரியவில்லை. கோயில் குளத்தில் குளிக்கும் பக்தர்களையும், அங்கு வாழ்ந்து வரும் மக்களையும் இந்த முதலை எதுவும் செய்வதில்லை என்பது அதிசயமாக கருதப்பட்டு வருகிறது.

Tags :
Advertisement