For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிர்ச்சி..!! பறவை காய்ச்சலுக்கு முதல்முறையாக ஒருவர் பலி..!! எப்படி பரவியது..?

While there have been no reports of anyone dying from bird flu so far, this is the first time a person has died from the disease in the United States, causing shock.
11:23 AM Jan 07, 2025 IST | Chella
அதிர்ச்சி     பறவை காய்ச்சலுக்கு முதல்முறையாக ஒருவர் பலி     எப்படி பரவியது
Advertisement

இதுவரை பறவை காய்ச்சலுக்கு யாரும் உயிரிழந்ததாக தகவல் இல்லாத நிலையில், தற்போது அமெரிக்காவில் முதல் முறையாக ஒருவர் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

அமெரிக்காவில் உள்ள லூசியான மாகாணத்தைச் சேர்ந்த 65 வயது முதியவர் காய்ச்சல் காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையின் முடிவில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக லூசியானா மாகாண சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. காட்டு பறவைகள் மற்றும் வளர்ப்பு பறவைகளை அவர் வளர்த்து வந்ததாகவும், இதனால் அவருக்கு பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுவரை அமெரிக்காவில் பறவை காய்ச்சலால் ஒரு உயிர் கூட பலியாகாத நிலையில், தற்போது முதல் முறையாக மரணம் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பறவை காய்ச்சல் மேலும் பரவாமல் இருக்க கூடுதல் நடவடிக்கைகளை அமெரிக்க அரசு எடுத்து வருகிறது.

Read More : மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்துள்ளீர்களா..? உங்களுக்கும் ரூ.1,000 வரப்போகுது..!! வெளியான குட் நியூஸ்..!!

Tags :
Advertisement