அதிர்ச்சி..!! கழிவுநீர் கலந்த குடிநீர்..!! 3 பேர் பரிதாப மரணம்..!! எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்..!!
கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 3 பேர் உயிரிழந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்லாவரம், ஆலந்தூர் பகுதிகளில் மாநகராட்சி குழாயில் வந்த குடிநீரை குடித்த 30-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”தாம்பரம் மாநகராட்சி 13-வது வார்டில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததில், 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. புயல் கரையைக் கடந்ததும் குடிநீர், கழிவுநீர் குழாய்கள் இடையே எவ்வித கலப்பும் இன்றி முறையாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறதா? என்பதை அரசு உறுதி செய்திருக்க வேண்டும்.
அதை செய்யாமல், சுகாதாரமற்ற குடிநீரால் மக்கள் உயிரோடு விளையாடியிருக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனம். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோருக்கு உரிய சிகிச்சை வழங்கி, அவர்கள் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்புவதை உறுதி செய்ய வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் உடனடியாக சீரான, சுகாதாரமான குடிநீர் மக்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
Read Moe : பொது இடங்களில் மாட்டிறைச்சி உண்ண தடை..!! உடனே அமலுக்கு வருவதாக முதல்வர் அறிவிப்பு..!!