அதிர்ச்சி!… டீசல் ஊற்றி பராத்தா போடும் சமையல்காரர்!… வைரலாகும் வீடியோ!
'Diesel Wala Paratha': சண்டிகரில் உள்ள தாபா ஒன்றில் சமையல்காரர் பெட்ரோல் - டீசல் ஊற்றி பராத்தாவை போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பொதுவாக உட்கொள்ளப்படும் பராத்தா, எண்ணற்ற மாறுபாடுகளைக் கொண்டுள்ளது. பெரும்பாலும் பிசைந்த காய்கறிகள், வேகவைத்த உருளைக்கிழங்கு, நன்றாக துருவிய பனீர் அல்லது அசைவ உணவுகளான துண்டு துண்தாக வெட்டப்பட்ட கோழி, முட்டை மற்றும் ஆட்டிறைச்சி போன்றவற்றால் நிரப்பப்பட்ட பராத்தா இந்தியாவில் பல வீடுகளில் பிரதான உணவாகும். ஆனால், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சண்டிகர் மாநிலத்தில் உள்ள ஒரு தாபாவின் சமையல்காரர், டீசலை ஊற்றி பராத்தாவை வறுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. "@nebula_world" என்ற பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பகிரப்பட்ட மூன்று நிமிடம் மற்றும் பதின்மூன்று வினாடிகள் கொண்ட வீடியோவில், தாபாவில் உள்ள சமையல்காரர், கருப்பு கண்ணாடி அணிந்தப்படி, பராத்தா தயாரிப்பு செயல்முறையை பெருமையுடன் காட்டுகிறார், ஒரு டின் கேனில் இருந்து டீசலை ஊற்றி பராத்தாவை வறுக்கிறார். இது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
இந்த வீடியோ வைரலானதையடுத்து, நெட்டிசன்கள் ஐசிஎம்ஆர்-ன் உணவு வழிகாட்டுதலை குறிப்பிட்டு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஐசிஎம்ஆர்-என்ஐஎன் அனைத்து வயதினருக்கும் இந்தியர்களுக்கான உணவு வழிகாட்டுதல்களை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது மற்றும் சுத்தமான மற்றும் சத்தான உணவை உட்கொள்ளுமாறு அனைவரையும் வலியுறுத்தியுள்ளது. உணவு வழிகாட்டுதலில், 56% தொற்றாத நோய்களுக்கு முறையற்ற உணவு முறையே காரணம் என்று ICMR வலியுறுத்தியுள்ளது. இந்தநிலையில், இதுபோன்ற ஒரு செயல் புற்றுநோய்க்கான உண்மையான செயல்முறை என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
Readmore: அதிர்ச்சி!… முன்கூட்டியே மாதவிடாய் நிறுத்தம்!… மரணத்தின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்!