அதிர்ச்சி..!! 40 பயணிகளுடன் சென்ற படகு திடீரென கடலில் கவிழ்ந்ததில் 8 பேர் மரணம்..!! பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம்..!!
இந்தோனேசியாவின் கிழக்கு மலுகு மாகாணத்தில் உள்ள செரம் பாகியம் பராட் ரீஜென்சிக்கு அருகில் உள்ள கடலில் 40 பயணிகளுடன் சென்றபோது, திடீரென படகு கவிழ்ந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். நீரின் மேற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த மரத்துண்டில் மோதி படகு மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பலர் காணாமல் போயுள்ளதாக இந்தோனேசியாவின் தேசிய தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பல குழந்தைகளை உள்ளடக்கிய அந்த படகு, போர்னியோ தீவின் வடக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த போது கவிழ்ந்து மூழ்கியது. அனுக்ரா எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்ட படகு கவிழ்ந்ததற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து மீட்புக்குழுவின் தலைவர் முகமது அராபா கூறுகையில், உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில், ரீஜென்சியில் உள்ள துறைமுகத்தில் இருந்து அம்பன் நகருக்கு படகு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்து ஏற்பட்டதாக” தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி, இந்தோனேசியாவின் கடற்கரையில் உள்ள ஜகார்த்தா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் படகு தீப்பிடித்து எரிந்ததில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.