For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிர்ச்சி..!! டைட்டானிக், அவதார் திரைப்பட தயாரிப்பாளர் புற்றுநோயால் திடீர் மரணம்..!! திரை பிரபலங்கள் இரங்கல்..!!

Titanic and Avatar Producer Jon Landau Passes Away at 63
10:42 AM Jul 08, 2024 IST | Chella
அதிர்ச்சி     டைட்டானிக்  அவதார் திரைப்பட தயாரிப்பாளர் புற்றுநோயால் திடீர் மரணம்     திரை பிரபலங்கள் இரங்கல்
Advertisement

பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஜான் லாண்டவ் (63). இவர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உலகளவில் சூப்பர் ஹிட்டான டைட்டானிக் படத்தைத் தயாரித்தார். இப்படத்திற்காக ஆஸ்கர் விருதையும் வென்றார். அடுத்ததாக அவதார் (2009), அவதார்: தி வே ஆஃப் வாட்டர் (2022) படங்களைத் தயாரித்தார். இதுவும் உலக அளவில் வெற்றி பெற்றது.

Advertisement

இந்தப் படங்களைத் தவிர, கேம்பஸ் மேன், சோலாரிஸ், அலிடா: பேட்டல் ஏஞ்சல் ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார். இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்த ஜான் லாண்டவ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் காலமானதாக மகன் ஜேமி அறிவித்துள்ளார். அவர் மறைவுக்கு ஹாலிவுட் திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த ஜான் லாண்டவுக்கு ஜூலி என்ற மனைவி, ஜேமி, ஜோடி என்ற மகன்கள் உள்ளனர்.

Read More : பூமிக்கு மிக நெருக்கம்..!! அழிவு உறுதி..!! எச்சரிக்கும் இஸ்ரோ தலைவர் சோம்நாத்..!!

Tags :
Advertisement