முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அதிர்ச்சி..!! சாலையில் சென்ற காரின் மீது மோதிய விமானம்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

01:43 PM Nov 15, 2023 IST | 1newsnationuser6
Advertisement

அமெரிக்காவில் சாலையில் சென்ற காரின் மீது விமானம் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

அமெரிக்காவில் டெக்ஸாஸில் உள்ள மிட்லேண்ட் என்ற இடத்தில் இருந்து டல்லஸ் நோக்கி சிறிய ரக விமானம் பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அதன் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, விமானி டல்லஸ் புறநகர் பகுதியில் உள்ள விமான நிலையத்தில் அவசரமாக விமானத்தை தரையிறக்க முயற்சித்தார்.

அப்போது அதிவேகமாக வந்த விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி, விமான நிலையை எல்லையை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த வேலியை உடைத்துக் கொண்டு சாலையின் பக்கம் திரும்பியது. அப்போது, விமானத்தின் சக்கரம் கழன்று விழுந்தது. இதனால், தரையில் தாறுமாறாக சறுக்கியபடி சென்ற விமானம், சாலையில் சென்று கொண்டிருந்த காரின் மீது மோதியது.

இதனைக் கண்ட விமான நிலைய அதிகாரிகள் விரைந்து சென்று, இந்த விபத்தில் காயமடைந்த கார் ஓட்டுநர் மற்றும் விமானி ஆகியோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானமும், காரும் மோதி விபத்துக்குள்ளான வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவை காண: https://x.com/upuknews1/status/1723628597259489394?s=20

Tags :
அமெரிக்காசாலைவிபத்துவிமானம்
Advertisement
Next Article