For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிர்ச்சி..!! புற்றுநோயால் தமிழ் திரைப்பட நடிகை விஜயகுமாரி மரணம்..!! திரையுலகினர் இரங்கல்..!!

Vijayakumari, who acted as a supporting actress in many films and serials, died of cancer this morning.
02:48 PM Jun 06, 2024 IST | Chella
அதிர்ச்சி     புற்றுநோயால் தமிழ் திரைப்பட நடிகை விஜயகுமாரி மரணம்     திரையுலகினர் இரங்கல்
Advertisement

சமீபகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பல்வேறு கருத்துக் கணிப்புகள் கூறி வருகிறது. பிரபலங்கள் இது போன்ற புற்றுநோயால் பாதிக்கப்படும் தகவல்கள் வெளியாகி வருவதையும் அதிகம் பார்க்க முடிகிறது. புற்றுநோய் ஆரம்பத்திலேயே கவனிக்கப்பட்டால் அதனை கட்டுக்குள் கொண்டு வந்து அதில் இருந்து ஒருவரை காப்பாற்ற முடியும். இப்படி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகை கௌதமி, மனிஷா கொய்ராலா போன்ற நடிகைகள் உயிர் பிழைத்துள்ளனர்.

Advertisement

அதே சமயம் கடைசி நேரத்தில் புற்றுநோய் இருப்பது தெரியவரும் பிரபலங்கள் சிலர் உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்கின்றன. அண்மையில் கூட நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளையராஜாவின் மகள் பவதாரணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது தொடர்ந்து தற்போது துணை நடிகையாக பல படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ள விஜயகுமாரி, இன்று காலை புற்றுநோயால் உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இவர், சென்னை வளசரவாக்கத்தில் தங்கி சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவருக்கு புற்றுநோய் இருக்கும் தகவல் மூன்றாவது ஸ்டேஜில் தான் தெரியவந்துள்ளது. இதற்காக 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். தன்னுடைய சிகிச்சைக்காக உதவ வேண்டும் என KPY பாலா உள்ளிட்ட பலரிடம் உதவியை நாடினார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிர் பிரிந்தது. இவரது மரணம் திரையுலகை சேர்ந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read More : வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!! அதிரடியாக உயருகிறது டிவி சேனல்களுக்கான டிஷ் கட்டணம்..!!

Tags :
Advertisement