For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிர்ச்சி..!! தேர்தல் பிரச்சாரத்தின்போது மேயர் வேட்பாளர் சுட்டுக்கொலை..!! பெரும் பரபரப்பு..!!

Alfredo Cabrera, a mayoral candidate who was campaigning in Mexico, was shot dead on Wednesday.
02:53 PM May 30, 2024 IST | Chella
அதிர்ச்சி     தேர்தல் பிரச்சாரத்தின்போது மேயர் வேட்பாளர் சுட்டுக்கொலை     பெரும் பரபரப்பு
Advertisement

மெக்சிகோ நாட்டில் புதன்கிழமை அன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த மேயர் வேட்பாளரான ஆல்ஃபிரடோ கப்ரேரா சுட்டுக் கொல்லப்பட்டார். இதனை குரேரோ ஆளுநர் உறுதி செய்தார். ஜூன் 2ஆம் தேதி அதிபர் உட்பட பல்வேறு பொறுப்புகளுக்கு அந்த நாட்டில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளரான மேயர் வேட்பாளர் ஆல்ஃபிரடோ கப்ரேரா அருகில் வந்த நபர் ஒருவர், அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார்.

Advertisement

இந்த குற்ற செயலில் ஈடுபட்டவர் மற்றும் அதன் பின்னணியில் இருப்பவர்களை அடையாளம் கண்டு, சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டுமென குரேரோ ஆளுநர் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் முதல் தேர்தலை முன்னிட்டு சுமார் 22 படுகொலை சம்பவங்கள் அந்நாட்டில் அரங்கேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், ஆளும் அரசு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளை கூட செய்ய தவறி உள்ளதாக எதிர்க்கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிஆர்ஐ கட்சி குற்றச்சாட்டு வைத்துள்ளது.

இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற இருக்கும் தேர்தலில் சுமார் 27,000 பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் புதிய அதிபர், செனட் உறுப்பினர்கள், ஆளுநர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More : செம குட் நியூஸ்..!! அரசுப் பள்ளிகளில் இணையதள வசதி..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

Tags :
Advertisement