அதிர்ச்சி..!! தும்மும்போது திடீரென வெளியே வந்து விழுந்த குடல்..!! நடந்தது என்ன..?
அமெரிக்காவின் ஃபுளோரிடாவைச் சேர்ந்த 63 வயது நபர், திடீரென தும்மியதால் குடல் வெளியேறியுள்ளது.
63 வயதான நபர் தனது குடும்பத்தாருடன் உணவகத்தில் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென தும்மியுள்ளார். உடனே அவருக்கு அடி வயிற்றில் வலி வந்துள்ளது. அடுத்த நிமிடங்களில் அவருடைய குடலும் வெளியேறி இருக்கிறது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
குறித்த நபருக்கு 15 நாட்களுக்கு முன்னதாக சிஸ்டெக்டமி என்கிற சிறுநீர் பை அகற்றி அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். எனவே, அவருடைய அடி வயிற்றில் அதாவது அறுவை சிகிச்சை நடைபெற்ற இடத்தில் தையல் போடப்பட்டிருந்தது. அந்த இடத்தில் இருந்தே தையல் பிரிக்கப்பட்ட குடல் வெளியேறியுள்ளது. மருத்துவமனைக்கு அழைத்த செல்லப்பட்ட பின்னர், வெளியே வந்த குடல் மருத்துவர்களின் உதவியுடன் மீண்டும் உடலுடன் பொருத்தப்பட்டது.
மேலும், அவருடைய சிறு குடலில் ஏதேனும் காயங்கள் இருக்கிறதா எனவும் வைத்தியர்கள் பரிசோதித்துள்ளனர். அவருடைய உடல்நிலை தற்போது முன்னேறி வந்தாலும், தும்மியதால் குடல் வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Read More : 7ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் தமன்னா பற்றிய வாசகம்..!! பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு..!!