டொனால்ட் டிரம்புக்கு அதிர்ச்சி!. கமலா ஹாரிஸ் முன்னிலை!. அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக்கணிப்பு!
US Elections 2024: அமெரிக்க அதிபா் தோ்தலில் டொனால்ட் டிரம்பை விட ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸ் முன்னிலையில் இருப்பதாக ராய்ட்டர்ஸ் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5-ஆம் தேதி நடைபெற இருக்கும் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. சரியாகச் சொல்ல வேண்டுமானால் இன்னும் 105 நாட்களே உள்ளன. ஆனால், அமெரிக்க அரசியலில் அடுத்தடுத்த பரபரப்பு சம்பவங்கள் நடந்தவண்ணம் உள்ளன. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்வும் களத்தில் இருந்தனர். இதில் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்கள், முன்னாள் அதிபர் ட்ரம்பிற்கு ஆதரவாக பார்க்கப்பட்டன.
ட்ரம்ப் - பைடன் கலந்துகொண்ட விவாத நிகழ்ச்சியில் பைடனின் தடுமாற்றம், ட்ரம்ப் மீது நடந்த துப்பாக்கிச் சூடு, பைடன் மறதியில் வேறொரு பெண்ணை மனைவி என நினைத்து முத்தம் கொடுக்க முயன்றது, பைடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது என அடுத்தடுத்த சம்பவங்கள் நிகழ்ந்தன. பைடனுக்கு தனிப்பட்ட முறையில் நிகழ்ந்த சம்பவங்கள் எல்லாம் அவரது வயது முதிர்வின் காரணமாகவே ஏற்பட்டது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது.
இதில் அதிகமான விமர்சனங்களை எதிர்கொண்டது ட்ரம்ப் உடனான விவாத்தில் பைடன் தடுமாறியதற்குத்தான். இதன்காரணமாக அவரது சொந்தக் கட்சிக்குள்ளேயே அதிருப்தி எழுந்தது. ஜனநாயகக் கட்சியினர் பலர் பைடனை போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர். விவாதத்திற்கு முன் வந்த கருத்துக்கணிப்புகள் ட்ரம்ப் மற்றும் பைடன் என இருவருக்கும் சமமான வாய்ப்புகள் இருப்பதை வெளிப்படுத்திய நிலையில், விவாதத்திற்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பைடனிற்கு சரிவைக் காட்டின. பைடன் தான் போட்டியிடுவதில் இருந்து விலகுவது குறித்து எந்த ஒரு காரணத்தையும் தெரிவிக்கவில்லை என்றாலும்கூட, கட்சிக்குள் தொடர்ந்த அழுத்தங்களே இதற்கான காரணமாக பார்க்கப்படுகிறது.
1968 ஆம் ஆண்டுக்குப் பின், அதிபராக இருக்கும் ஒருவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தது இதுவே முதல்முறை. இந்நிலையில்தான், தான் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் பைடன். அதுமட்டுமின்றி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராகவும் முன்மொழிந்தார். இந்தநிலையில், குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்பை விட ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ் இரண்டு சதவீதம் அதிகமான புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளதாக ராய்ட்டர்ஸ்/இப்சோஸ் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த வார வாக்கெடுப்பில் டிரம்பிற்கு எதிராக போட்டியில் பைடன் இரண்டு-புள்ளி குறைவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த மாதம் நடைபெறும் ஜனநாயக தேசிய மாநாட்டில் ஜனாதிபதி வேட்பாளராக ஆவதற்கு ஹாரிஸ் போதுமான பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றுள்ளார். துணைத் தலைவர் கிட்டத்தட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களாலும் அங்கீகரிக்கப்பட்டு, நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களிடம் இருந்து $100 மில்லியன் வசூலித்து சாதனை படைத்துள்ளார். ஜனநாயகக் கட்சியினருக்கு அவர் ஒரே நம்பிக்கையாகிவிட்டார் என்று வட்டாரங்கள் கூறுகின்றன.
Readmore: பட்ஜெட் 2024!. புற்றுநோயாளிகளுக்கு நிவாரணம்!. 3 மருந்துகளுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு!