For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிர்ச்சி..!! விமான விபத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர், அவரது மகள்கள் உள்பட 4 பேர் பலி..!!

11:17 AM Jan 06, 2024 IST | 1newsnationuser6
அதிர்ச்சி     விமான விபத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர்  அவரது மகள்கள் உள்பட 4 பேர் பலி
Advertisement

கரீபியன் தீவு கடலில் விமானம் விழுந்த விபத்தில் பிரபல நடிகர் மற்றும் அவரது 2 மகள்கள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

ஜெர்மனியை சேர்ந்தவர் கிறிஸ்டியன் ஆலிவர். இவர், ஹாலிவுட் நடிகர். இவரது மகள்கள் மதிதா (10), அன்னிக் (12). கிறிஸ்டியன் ஆலிவர் நேற்று மாலை தனது 2 மகள்கள் மற்றும் பைலட் ஆகியோருடன் கரீபியன் தீவுகளுக்கு விடுமுறையைக் கொண்டாட சென்றுள்ளார். அப்போது பெகுய்யா என்ற சிறிய தீவில் இருந்து செயின்ட் லூசியா நகரத்தை நோக்கி 4 பேரும் குட்டி விமானத்தில் பயணித்துள்ளனர். ஆனால், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கரீபியன் கடல் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கிறிஸ்டியன் ஆலிவர் உள்பட 4 பேரும் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கடற்படை அதிகாரிகள், மீனவர்கள் மற்றும் கடல் நீருக்கு அடியில் சென்று தேடும் வீரர்கள் உள்ளிட்டோர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் டிவி தொடரில் நடித்து பிரபலமானவர் கிறிஸ்டியன் ஆலிவர். பின்னர், ‘தி குட் ஜெர்மன்’ (The Good German) என்கிற படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகி, இதுவரை 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த சம்பவம் ஹாலிவுட் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement