முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அதிர்ச்சி..!! காங்கிரஸ் தேர்தலில் நடிகர் அஜித் பெயரில் போலி வாக்காளர் அட்டை..!! நடந்தது என்ன..?

08:21 AM Nov 24, 2023 IST | 1newsnationuser6
Advertisement

கேரளாவில் காங்கிரஸ் தேர்தலில் போலி வாக்காளர் அட்டைகள் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த புகாரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் ஒரு வாக்காளர் அட்டை நடிகர் அஜித் பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Advertisement

சமீபத்தில், கேரள இளைஞர் காங்கிரஸ் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், போலி வாக்காளர் அட்டைகள் பயன்படுத்தப்பட்டாக புகார் எழுந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணை அந்த குற்றச்சாட்டு உண்மை என தெரியவந்தது. இதுதொடர்பாக 4 இளைஞர் காங்கிரஸார் கைது செய்யப்பட்டனர். அவர்கள் காங்கிரஸின் ஏ-குழுவிற்காக இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக கேரள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாநிலத்தின் இளைஞர் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் ஏ-குழுவில் இடம்பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏ-குழு ஒரு காலத்தில் ஏ.கே.ஆண்டனி, உம்மன் சாண்டி போன்ற தலைவர்களின் தலைமையில் இருந்தது. கைது செய்யப்பட்டவர்கள் அபி விக்ரம், ஃபெனி, பினில் பினு மற்றும் விகாஸ் கிருஷ்ணா என அடையாளம் காணப்பட்டனர்.

ஒன்மனோரமா செய்தியின் அறிக்கையில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளில் இருந்து 24 போலி வாக்காளர் அட்டைகளை போலீசார் கைப்பற்றியதாகவும், அதுபோன்ற ஒரு போலி வாக்காளர் அட்டை திரைப்பட நடிகர் அஜித்தின் பெயரில் தயாரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடூரைச் சேர்ந்த விகாஸ் கிருஷ்ணா ரூ.1000-க்கு ஒரு கார்டு வீதம் போலி வாக்காளர் அட்டைகளை தயாரித்துக் கொடுத்துள்ளார். குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. முறைகேடுகள் தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் தலைவர்களை விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.

Tags :
இளைஞர் காங்கிரஸ்கேரள மாநிலம்தேர்தல்
Advertisement
Next Article