முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அதிர்ச்சி..!! தேர்வெழுத சென்ற 9ஆம் வகுப்பு மாணவி மாரடைப்பால் மரணம்..!! தொடரும் சோகம்..!!

01:18 PM Nov 04, 2023 IST | 1newsnationuser6
Advertisement

முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்த மாரடைப்பு தற்போது இளம் வயதினைரையும் பாதித்து வருகிறது. அதிலும் பள்ளி செல்லும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. பள்ளிகளில் விளையாடும் போது அல்லது படிக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு மாணவ, மாணவிகள் உயிரிழக்கும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளது.

Advertisement

இந்நிலையில், குஜராத் மாநிலம் அம்ரேலி நகரில் 9ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவி சாக்‌ஷ் ரஜோசரா என்றும், அவர் ராஜ்கோட் மாவட்டத்தின் ஜாஸ்டன் தாலுகாவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. சாந்தபா கஜேரா பள்ளியில் படித்து வந்த அவர் நேற்று காலை தேர்வறைக்குள் நுழையும் போது மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இறப்பின் காரணம் குறித்து கண்டறிய மாணவியின் உடல், உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டது. கடந்த சில மாதங்களாக குஜராத்தில், குறிப்பாக ராஜ்கோட்டில் இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்பட்டு வருவது பெற்றோர் மத்தியில் பீதியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags :
9ஆம் வகுப்பு மாணவிஇளம்வயதுகுஜராத் மாநிலம்மயக்கம்மரணம்மாரடைப்பு
Advertisement
Next Article