For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிர்ச்சி..!! பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து 22 மாணவர்கள் பலி..!! 100-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கித் தவிப்பு..!!

22 students killed, over 100 people trapped in rubble as school collapses in Nigeria
10:20 AM Jul 13, 2024 IST | Chella
அதிர்ச்சி     பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து 22 மாணவர்கள் பலி     100 க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கித் தவிப்பு
Advertisement

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டின் பிலடியோ மாகாணம் பசா பிஜி கிராமத்தில் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. இரண்டு அடுக்குமாடிகளை கொண்ட இந்த பள்ளி, ஆற்றங்கரையோரம் உள்ளது. இந்த பள்ளியில் 120-க்கும் மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், பள்ளிக்கூடத்தில் நேற்று வழக்கம்போல் மாணவ, மாணவிகள் கல்வி கற்றுக்கொண்டிருந்தனர்.

Advertisement

அப்போது திடீரென பள்ளிக்கூட கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், இந்த விபத்தில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் என மொத்தம் 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கட்டிட இடிபாடுகளுக்குள் 100-க்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டிருப்பதால் அவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

Read More : மக்களே..!! இனி இந்த சான்றிதழ் தேவையில்லையாம்..!! புதிய விதிமுறைகளை தெரிஞ்சிக்கோங்க..!!

Tags :
Advertisement