ஷாக்!. அரைகுறை ஆடையுடன் உலா!. எச்சரிக்கை விடுத்த அமைச்சர்!. தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல்!
Dubai Girl: இந்தூரில் அரைகுறை ஆடையுடன் இளம்பெண் வீதியில் உலா சென்றதற்கு அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பெண் தற்கொலை செய்யப்போவதாக அறிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் மெக்தூத் சாட்-சௌப்பட்டி மற்றும் 56 டுகான் சாட்-சவுப்பட்டி பகுதிகளில் அரைகுறை ஆடைகளுடன் ஒரு பெண் சுற்றித்திரியும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பலர் அவரை ரசித்துப்பார்ப்பது பதிவாகி உள்ளது. இதற்கு மபி பா.ஜ அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,’ இந்தூர் போன்ற கலாச்சார நகரத்தில் இதுபோன்ற அநாகரீகம் நடக்கக்கூடாது. அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு அவர்களின் விருப்பப்படி வாழவும் சாப்பிடவும் சுதந்திரம் அளிக்கிறது என்பது உண்மைதான். ஆனால், அத்தகைய சுதந்திரங்களை தவறாகப் பயன்படுத்துவதால் சமூகம் மோசமாகப் பாதிக்கப்பட்டால், அது அடிப்படை உரிமைகளைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு சமம்’ என்றார். இதையடுத்து பஜ்ரங் தளம் மற்றும் சில பெண்கள் அமைப்புகள் அந்த இளம் பெண் மீது புகார் தெரிவித்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டன.
இதனால் பிரச்னை விஸ்வரூபமானது. இதை தொடர்ந்து நேற்று அந்த இளம் பெண் தனது செயலுக்கு மன்னிப்புக் கோரினார். இந்தியில் பேசிய அவர், தான் துபாயில் வசிப்பதாக தெரிவித்தார். அவர் கூறுகையில்,’பொது இடங்களில் இதுபோன்ற குட்டையான ஆடைகளை அணிந்திருக்கக் கூடாது என்பதைஉணர்ந்து கொண்டேன். இனிமேல் இதை செய்ய மாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள். நான் தற்கொலை செய்து கொள்ள விரும்புகிறேன்’ என்றார். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
Readmore: பெற்றோர்களே!. நீண்ட நேர செல்போன் பயன்பாடு!. 3-ல் ஒரு குழந்தை குறுகிய பார்வையால் பாதிப்பு!