yarn: அதிர்ச்சி!… அதிரடியாக உயர்த்தப்பட்ட நூல் விலை!... கிலோவுக்கு எவ்வளவு தெரியுமா?... ஜவுளித் தொழில் கடும் பாதிப்பு!
yarn: நூல் விலை ரூ.10 வரை உயர்த்தப்பட்டுள்ளதால் ஜவுளித் தொழில் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு மாதத்துக்கான முதல் 2 வாரங்களுக்கான நூல் விலையை நூற்பாலைகள் கடந்த மார்ச் 1-ம் தேதி அறிவித்தன. இதில் நூல் விலை கிலோவுக்கு ரூ.10 உயர்த்தப்பட்டது. தொடர்ந்து நேற்று மீண்டும் நூற்பாலைகள் நூல் விலையை ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்தியிருப்பது தொழில் துறையினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இது தொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் (டீமா) தலைவர் எம்.பி.முத்துரத்தினம் கூறியதாவது: பஞ்சு, நூல் விலைஉயர்வால் ஜவுளித் தொழில் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன.
பருத்தியை பதுக்கிவைத்து, செயற்கையாக விலையை உயர்த்துகின்றனர். பருத்தி விலையைக் கட்டுப்படுத்த வேண்டும். ஜவுளித் தொழில் துறை சிறப்பாக இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். ஆனால், உண்மை நிலையை ஆட்சியாளர்கள் உணரவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
Readmore: இன்னும் 3 நாட்கள் பொறுத்திருங்கள்!… அறிவிப்பு வெளியாகும்!… Annamalai விளக்கம்!