For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிர்ச்சி!. சிகிச்சைக்கு சென்ற இளம்பெண் திடீர் மரணம்!. தவறான ஊசி போடப்பட்டதால் விபரீதம்!

Shock! The young woman who went to treatment died suddenly! Tragedy due to the wrong injection!
07:13 AM Jul 22, 2024 IST | Kokila
அதிர்ச்சி   சிகிச்சைக்கு சென்ற இளம்பெண் திடீர் மரணம்   தவறான ஊசி போடப்பட்டதால் விபரீதம்
Advertisement

Wrong injection: திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிறுநீரக கற்களை அகற்ற சிகிச்சைக்கு சென்ற இளம்பெண் மயங்கி விழுந்து தீடிரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர் தவறான ஊசி செலுத்தியதே காரணம் என பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.

Advertisement

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மலையின்கீழு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணா (28). இவருக்கு சிறுநீரகத்தில் கற்கள் இருப்பது தெரியவந்ததை அடுத்து, இது தொடர்பான சிகிச்சைக்காக நெய்யாற்றின்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம், அங்கு பணியில் இருந்த மருத்துவர் வினு, கிருஷ்ணாவுக்கு ஊசி வாயிலாக மருந்து செலுத்தியுள்ளார்.

அடுத்த சில நிமிடங்களிலேயே கிருஷ்ணா சுயநினைவின்றி மயங்கி விழுந்தார். அவரது நிலைமை மோசமானதை அடுத்து, அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், ஐந்து நாட்களாக சுயநினைவின்றி இருந்த கிருஷ்ணா, நேற்று காலை உயிரிழந்தார். மருத்துவர் வினு செலுத்திய தவறான மருந்து மற்றும் ஊசியாலேயே தன் மகள் உயிரிழந்ததாக இளம் பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து கிருஷ்ணாவின் கணவர் ஷரத் அளித்த புகாரின் அடிப்படையில், மருத்துவர் வினு மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

அதில், 'ஏற்கனவே ஒவ்வாமை பிரச்னைகள் இருந்த பெண்ணுக்கு, அது தொடர்பான பரிசோதனை எதுவும் மேற்கொள்ளாமல் தவறாக ஊசி செலுத்தப்பட்டதில் அவர் உயிரிழந்தார்' என, கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த குற்றச்சாட்டை கேரள அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் மறுத்துள்ளது.

இதுகுறித்த அறிக்கையில், 'வயிறு தொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு செலுத்தப்படும் வழக்கமான ஊசி தான் இளம் பெண்ணுக்கு செலுத்தப்பட்டது. 'இதனால், ஏற்பட்ட 'அனாபிலாக்சிஸ்' என்ற கடுமையான ஒவ்வாமை எதிர்வினை காரணமாக அவர் இறந்திருக்கலாம். இதற்கு டாக்டரின் அலட்சியமே காரணம் என்பதை ஏற்க முடியாது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: தொடர் வெற்றி!. இந்திய வீராங்கனைகள் அபாரம்!. 78 ரன்கள் வித்தியாசத்தில் UAEW தோல்வி!

Tags :
Advertisement