ஷாக்!. விபத்தில் சிக்கிய மெக்சிகோ அதிபரின் வாகனம்!. ஒருவர் உயிரிழப்பு!.
Mexican president: மெக்சிகோ நாட்டின் பெண் அதிபரான கிளாடியா ஷீன்பாமினின் உதவியாளர் வாகனம் விபத்தில் சிக்கியதில் மூதாட்டி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோ நாட்டின், 200 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மொரேனா கட்சியை சேர்ந்த கிளாடியா ஷீன்பாம் தனது 61வயதில் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம், மெக்சிகோவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்தநிலையில், வடக்கு கோஹுய்லா மாநிலத்தில் உள்ள மோன்க்ளோவா என்ற பகுதியில் அதிபர் கிளாடியா ஷீன்பாமின் கார் அணிவகுப்பின்போது, பின்னால் சென்ற அதிபரின் உதவியாளர்களின் ஜீப் வேன் மீது மோதி விபத்துக்குள்ளானதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும் அதிபர் கிளாடியா ஷீன்பாம் பயணித்த கார் விபத்தில் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: கச்சா எண்ணெய் மீதான வரி குறைப்பு!. இன்றுமுதல் அமல்!. பெட்ரோல் – டீசல் விலையில் மாற்றமா?