21 சிறுமிகளை வன்கொடுமை செய்த நபர்!. மரண தண்டனை விதிப்பு!. நீதிமன்றம் அதிரடி!
Death Sentence: அருணாச்சலப் பிரதேசத்தில் 21 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு போக்சோ சட்டத்தின்கீழ் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அருணாச்சலப் பிரதேச மாநிலம், ஷியோமி மாவட்டத்தில், 8 வயதுக்கு மேற்பட்ட 21 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, மாநில அரசு நடத்தும் குடியிருப்பு தொடக்கப் பள்ளியின் வார்டன் யும்கென் பாக்ரா என்பவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, IPC பிரிவுகள் 328 & 506 மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு யுபியாவில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நேற்று (சனிக்கிழமை) விசாரணைக்கு வந்தது.
அப்போது, 21 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தது நிரூபணமானதையடுத்து, யும்கென் பாக்ரா மரண தண்டனை விதித் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும், இந்த வழக்கில் பள்ளியின் ஹிந்தி ஆசிரியரான மார்போம் என்கோம்டிர், காரோ அரசு குடியிருப்புப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியரான சிங்துங் யோர்பென் ஆகியோரும் குற்றவாளிகளாக அறிவித்து 20 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து இட்டாநகர் காவல் கண்காணிப்பாளர் ரோஹித் ராஜ்பிர் சிங் கூறுகையில், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான சமூக விழிப்புணர்வில் இந்த தீர்ப்பு ஒரு முக்கிய தருணத்தை பிரதிபலிக்கிறது. இந்த தீர்ப்பு, உடனடியான பிரச்சினைக்கு தீர்வு காண்பது மட்டுமின்றி, குழந்தைகளின் உரிமைகள் மற்றும் நலனைப் பாதுகாப்பதற்கான கூட்டுப் பொறுப்பை வலுப்படுத்தும் வகையில், குழந்தைகளின் பாதுகாப்பைச் சுற்றியுள்ள பரந்த சமூக விழிப்புணர்விற்கான முக்கியமான திருப்புமுனையாகவும் செயல்படுகிறது' என்று கூறினார்.