முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அதிர்ச்சி!. கனமழையால் நொடி பொழுதில் அடியோடு இடிந்த கட்டிடம்!. பலி எண்ணிக்கை உயர்வு!.

3 dead, many trapped as under-construction building collapses in Bengaluru
05:40 AM Oct 23, 2024 IST | Kokila
Advertisement

Bengaluru: கனமழை கொட்டி தீர்க்கும் பெங்களூருவில் புதிதாக கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென அடியோடு இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்.

Advertisement

பெங்களூரு, கே.ஆர்.புரம் பாபுசாப் பாளையத்தில் 6 அடுக்கு குடியிருப்பு கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. கட்டிட பணியில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதற்காக அவர்கள் கட்டிடத்தின் உள்ளேயே குடும்பத்துடன் தங்கி இருந்தார்கள். தரைத்தளம் மற்றும் 6 மாடிகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் டைல்ஸ் பதிக்கும் பணி தற்போது நடந்து கொண்டிருந்தது. இந்த பணியில் சுமார் 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இந்தநிலையில், பெங்களூரில் ஆங்காங்கே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதன்படி, கட்டிடம் இருந்த பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து ஈரத்தன்மை அதிகம் இருந்த நிலையில் கட்டிடம் உறுதிதன்மையை இழந்து நேற்று மாலை 3.40 மணிக்கு அடியோடு இடிந்து விழுந்தது. பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், மற்றும் கட்டிடத்தின் உள்ளே தொழிலாளர்களின் குடும்பமும் இருந்ததால் குழந்தைகள், பெண்களும் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் விரைவாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கிய நபர்களை மீட்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. ஆனாலும், போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் பொதுமக்களும் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளை அகற்றுவதற்கு ஜேசிபி இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு மீட்கப்பட்ட நபர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கிய நபர்களின் எண்ணிக்கை தெரியாத நிலையில் காயம் அடைந்த நபர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

Readmore: Alert…! மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பயங்கர காற்று… தீவிர புயலாக மாறியது டானா…!

Tags :
3 deadBengaluruconstruction building collapses
Advertisement
Next Article