ஷாக்!. ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் தாக்குதல்!. 40 வீரர்கள் பலி!.
Terrorist attack: சாட் நாட்டில், ராணுவ முகாமை குறிவைத்து, 'போகோ ஹராம்' பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில், 40 பேர் வீரர்கள் உயிரிழந்தனர்.
சாட் நாட்டின் மேற்கு பகுதியில், நைஜீரியா எல்லையில் உள்ள கோபோவா என்ற இடத்தில், ராணுவ முகாமை குறிவைத்து, நேற்று முன்தினம் இரவு போகோ ஹராம் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில், 40 வீரர்கள் உயிரிழந்தனர்; 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. சாட் அதிபர் மஹமத் இட்ரிஸ் டெபி இட்னோ, தாக்குதல் நடந்த பகுதியை நேற்று பார்வையிட்டார். தாக்குதல் நடத்திய போகோ ஹராம் அமைப்புக்கு தகுந்த பதிலடி கொடுக்கும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், போகோ ஹராம் 2009ல், கிளர்ச்சியை துவங்கியது. இதில், 40,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும், 20 லட்சத்துக்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்தனர். அண்டை நாடான சாட்டிலும் போகோ ஹராம் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.
Readmore: த.வெ.க மாநாட்டில் கலந்து கொள்ள வந்த 6 த.வெ.க தொண்டர்கள் உயிரிழப்பு… தலைவர் விஜய் இரங்கல்…!