அதிர்ச்சி!... இந்தியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்!... அலறிய மக்கள்!
Earthquake: இந்தியாவில் அடுத்தடுத்து 2 மாநிலங்களில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரில் இரவு 11:01 மணிக்கு 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் ஆழம் பூமியின் மேற்பரப்பிலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் 33.34 டிகிரி அட்சரேகை மற்றும் 76.62 டிகிரி தீர்க்கரேகையில் இருந்ததாக NCS தெரிவித்துள்ளது. மாலை 5:20 மணியளவில் 3.8 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் ஆழம் பூமியின் மேற்பரப்பில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் 33.37 டிகிரி அட்சரேகை மற்றும் 76.69 டிகிரி தீர்க்கரேகையில் இருந்ததாக NCS தெரிவித்துள்ளது.
இதேபோல் ராஜஸ்தானின் பாலியில் இன்று அதிகாலை 01.29 மணியளவில் 3.7 ரிக்டர் அளவிலான நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
Readmore: அதிர்ச்சி ரிப்போர்ட்…! அதிக எடை கொண்ட பெண்களுக்கு அறுவைச் சிகிச்சை பிரசவம் இருமடங்கு அதிகரிப்பு…!