ஷாக்!. இரவோடு இரவாக கேப்டன் பொறுப்பில் இருந்து விலகல்!. பாபர் அசாம் அறிவிப்பு!
Babar Assam: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடர், அண்மையில் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற டி20 உலக கோப்பைத் தொடரிலும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி மிகவும் சராசரியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 50 ஓவர் உலகக் கோப்பையின்போது பாபர் அசாமின் தலைமைப் பண்பு (கேப்டன்சி) கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி கேப்டன் பதவியிலிருந்து விலகினார். அதன்பின், கடந்த ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், அதிலும் பாகிஸ்தான் அணி சரியாக செயல்படாத நிலையில், மீண்டும் பாபர் அசாமின் கேப்டன்சி மீதான விமர்சனங்கள் அதிகரித்தன.
தற்போது டெஸ்ட் போட்டியில் ஷான் மசூத், ஒருநாள் டி20யில் பாபர் அசாம் கேப்டன்களாக இருக்கிறார்கள். விரைவில் சாம்பியன்ஷ் டிராபி பாகிஸ்தானில் தொடங்கவிருக்கிறது. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் (டி20, ஒருநாள்) பாபர் அசாமுக்கு பதிலாக முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட்டுவதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், பாபர் அசாம் மீண்டும் சாம்பியன் டிராவி வரை கேப்டன் பொறுப்பில் தக்கவைக்கப்படுவார் எனக் கூறப்பட்டது.
அண்மையில் வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 0 என்ற கணக்கில் தோற்று சொந் மண்ணில் மோசமான சாதனையை படைத்தது. இதனால் அந்த அணி கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒயிட்-பால் கேப்டன் பதவியில் இருந்து நட்சத்திர வீரர் பாபர் அசாம் விலகியுள்ளார்.
இதுகுறித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “பாகிஸ்தான் ஆண்கள் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நான் விலகுகிறேன். இது தொடர்பாக எனது முடிவை கடந்த மாதமே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு நான் கடிதம் அனுப்பிவிட்டேன். பாகிஸ்தான் அணியை வழிநடத்துவது மிகப்பெரிய கௌரவம், ஆனால் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி பேட்ஸ்மேனாக எனது பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். கேப்டன் பதவி எனக்கு பலன் அளிக்கும் அனுபவமாக இருந்தது. ஆனால் குறிப்பிடத்தக்க பணிச்சுமையை அது எனக்கு ஏற்படுத்தியது. நான் எனது குடும்பத்துடன் சிறிது நேரம் செலவழிக்க விரும்புகிறேன். பேட்டிங் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில் அதிக ஆற்றலை செலவிட நினைக்கிறேன். ரசிகர்களின் அசைக்க முடியாத ஆதரவு மற்றும் என் மீதான நம்பிக்கைக்கு நான் நன்றி உள்ளவனாக இருப்பேன் என்று பதிவிட்டுள்ளார்.
Readmore: இஸ்ரேல்-ஈரான் போர் எதிரொலி!. விலை உயரும் அபாயம்!. உலக நாடுகள் அச்சம்!