ஷாக்!. ஒரேயொரு மொபைல் நோட்டிஃபிகேஷன்!. எவ்வளவு நேரம் வீணாகிறது தெரியுமா?.
Mobile Notification: போனில் வரும் ஒரே ஒரு நோட்டிபிகேஷன் மூலம் ஒரு நாளில் எவ்வளவு நேரம் வீணாகிறது என்பது குறித்து கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆய்வு செய்து, பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் அறிவியல் நிறைய முன்னேற்றம் கண்டுள்ளது. உலகம் ஸ்மார்ட் ஆகிவிட்டது. இப்போது லேண்ட்லைன் போன்களில் இருந்து ஸ்மார்ட்போன்கள் அதிகமாக மக்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டன. அதே சமயம், உலகில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றம் மக்களுக்குத் தெரியாத சில பிரச்சனைகளையும் உருவாக்கியுள்ளது. முன்பெல்லாம் தொலைபேசிகள் மக்களுடன் பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டன. ஆனால் இப்போது கிட்டத்தட்ட எல்லா பணிகளுக்கும் போன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அந்தவகையில், தேவையில்லாமல் அலைபேசியில் அதிக நேரம் பலர் செலவிடுகின்றனர். இருப்பினும் அவர்கள் ஸ்மார்ட்போனிலிருந்து வரும் ஒரு நோட்டிஃபிகேஷன் அறிவிப்பு ஒரு நாளில் எவ்வளவு நேரத்தை வீணடிக்கிறது என்பதைக்கூட உணர மாட்டார்கள். கலிபோர்னியா பல்கலைக்கழகம் இது குறித்து ஆய்வு செய்துள்ளது. இதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
நோட்டிஃபிக்கேஷன் சரிபார்க்க தொலைபேசியை எடுத்தப்பின்னர் மீண்டும் வேலையில் கவனம் செலுத்த ஒருவருக்கு 23 நிமிடங்கள் ஆவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது, ஒரு நாளில் நான்கு நோட்டிஃபிக்கேஷன்கள் மட்டும் சரிபார்க்கும்போது கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் வீணாகிறது. எனவே ஃபோனில் இருந்து வரும் அறிவிப்பு அந்த முக்கியமான வேலையில் இருந்து உங்கள் கவனத்தை திசை திருப்புகிறது. உங்கள் மனம் மீண்டும் மீண்டும் நிலைத்தன்மையை இழக்கிறது. இதனால் பணியில் கவனம் செலுத்தி விரைவில் முடிக்க முடியாது.
Readmore: கடும் நிலச்சரிவு!. மண்ணோடு மண்ணாக புதைந்த வீடுகள்!. போஸ்னியாவில் 18 பேர் பலி!