முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்!! இன்று டாஸ்மாக் கடைகள் இயங்காது!!

05:20 AM Jun 04, 2024 IST | Baskar
Advertisement

வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் இன்று சென்னையில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடந்த முடிந்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற இருக்கின்றது. வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்க இருக்கிறது. காலை 11:30 மணிக்கு மேல் அரியணையில் அமரபோவது யார் என்பது தெரிந்துவிடும். இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்கும் வண்ணம் இன்று ஒரு நாள் மட்டும் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும், மதுபானக்கூடங்கள் மற்றும் எப் எல் 1 முதல் எப் எல் 11 வரை அனைத்தும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஹோட்டல் மற்றும் கிளம்புகளில் இயங்கி வரும் மதுபானக்கூடங்கள் மற்றும் டாஸ்மாக் மதுபான கடைகளும் மூட உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவினை மீறி மது விற்பனையில் ஈடுபடுவது தெரிய வந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.வாக்கு எண்ணும் பணி தொடங்க உள்ளதால் வாக்குச்சாவடிகளில் ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. ஆங்காங்கே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Read More: சென்னையில் ‘பிரேமலு’ பட நடிகையை நசுக்கித்தள்ளிய ரசிகர்கள்..! வைரலாகும் வீடியோ!!

Tags :
டாஸ்மாக்தேர்தல் முடிவுகள்மக்களவைத் தேர்தல்
Advertisement
Next Article