For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஷாக்! மூளைக்காய்ச்சல் நோய்க்குறி!. 59 குழந்தைகள் பலி!. 148 பேருக்கு பாதிப்பு!

Shock! Meningitis Syndrome!. 59 children killed! 148 people affected!
05:50 AM Aug 02, 2024 IST | Kokila
ஷாக்  மூளைக்காய்ச்சல் நோய்க்குறி   59 குழந்தைகள் பலி   148 பேருக்கு பாதிப்பு
Advertisement

Encephalitis Syndrome: கடந்த 2 மாதங்களில் மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தும் தீவிர மூளையழற்சி நோய்க்குறி(AES) காரணமாக இந்தியா முழுவதும் 15வயதுக்குட்பட்ட 59 குழந்தைகள் பலியாகியுள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதிசெய்துள்ளது.

Advertisement

கூற்றுப்படி, இந்தியாவில் கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து 148 வழக்குகள் இந்த நோயால் பதிவாகியுள்ளதாகவும். குஜராத்தின் 24 மாவட்டங்களில் இருந்து 140 வழக்குகளும் மத்திய பிரதேசத்தில் இருந்து 4 வழக்குகளும் , ராஜஸ்தானில் இருந்து 3 வழக்குகளும், மகாராஷ்டிராவில் ஒருவரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவான மொத்த வழக்குகளில் 59 குழந்தைகள் இறந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் சண்டிபுரா வைரஸ் 51 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

ஹெல்த் சர்வீசஸ் டைரக்டர் ஜெனரல் (DGHS) மற்றும் இயக்குநர், என்சிடிசி மற்றும் DC ICMR ஆகியோர் நேற்று இந்த இரு வைரஸ்கள் குறித்து மதிப்பாய்வு செய்ய கூட்டு கூட்டத்தை நடத்தினர். அப்போது, பொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் வெடிப்பு குறித்த விரிவான தொற்று நோயியல் விசாரணை மேற்கொள்வதற்கும் குஜ்ராத் அரசாங்கத்திற்கு உதவ தேசிய குழு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Readmore: ஆடி 18 அன்று பெண்கள் இந்த விஷயத்தை செய்தால் இவ்வளவு நன்மைகளா..? இந்த பொருளை வாங்க மறக்காதீங்க..!!

Tags :
Advertisement