முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அதிர்ச்சி!. கேரளாவில் 2 பேருக்கு குரங்கம்மை பாசிட்டிவ்!. நிலைமை ஆராய குழு அமைத்து உத்தரவு!

10:44 AM Dec 19, 2024 IST | Kokila
Advertisement

Monkey pox: ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவின் கண்ணூருக்கு வந்த 2 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் இருவரும் பரியாரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து கூடுதலாக தனி வார்டுகளை அமைக்கும்படி அதிகாரிகளுக்கு, கேரளா சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டு உள்ளார். நிலைமையை பற்றி ஆய்வு செய்வதற்காக அமைச்சர் தலைமையில், மாநில அளவிலான விரைவு பொறுப்பு குழுவினர் அமைக்கப்பட்டு உள்ளனர்.

Advertisement

இந்த இரு நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த தனி நபர்கள் யாருக்காவது அறிகுறிகள் காணப்பட்டால், அதுபற்றி கேரள சுகாதார துறைக்கு தெரிவிக்கும்படியும் அமைச்சர் வலியுறுத்தி உள்ளார். இதேபோன்று, நோயாளிகள் இருவரும் எந்த வழியாக கேரளாவை வந்தடைந்தனர் என்பது பற்றிய வழிகாட்டு குறிப்பு படமும் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Readmore: அம்பேத்கர் குறித்து எட்வினா மவுண்ட்பேட்டனுக்கு கடிதம் எழுதிய நேரு!. என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

Tags :
2 positiveKeralamonkey pox
Advertisement
Next Article