முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அதிர்ச்சி!. இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய WHO நிறுவனர் டெட்ராஸ் அதனோம்!

08:47 AM Dec 27, 2024 IST | Kokila
Advertisement

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ராஸ் அதனோம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

காஸாவுக்கு ஆதரவாக இஸ்ரேலை கண்டித்து ஏமன் தலைநகர் சனாவில், தினமும் 10 ஆயிரம் பேர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், ஏமன் தலைநகர் சனாவில் உள்ள விமான நிலையத்தில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. அப்போது, விமானத்தில் செல்வதற்காக, உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ராஸ் அதனோம், விமான நிலையத்திற்கு வந்து இருந்தார். தாக்குதலில் இருந்து, நூலிழையில், டெட்ராஸ் அதனோம் உயிர் தப்பினார். இவர் இருந்த இடத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் நடந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு, டெட்ராஸ் அதனோம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், 'சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் மதிக்க வேண்டும். மக்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்த கூடாது' என கூறியுள்ளார்.

Readmore: நட்பு முதல் பகை வரை!. தலிபான்களின் வெற்றியைக் கொண்டாடிய பாகிஸ்தான்!. ஆப்கானில் குண்டு வீசுவது ஏன்?

Tags :
fortunately survivedisraeli airstrikeTedros AdhanomWHO founder
Advertisement
Next Article