தமிழகத்தில் அதிர்ச்சி!… ஹாலிடே எதிரொலி!… ராக்கெட் வேகத்தில் உயர்ந்த விமான கட்டணம்!
Flight Ticket: தமிழகத்தில் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட உள்ளன. கோடை விடுமுறை சுற்றுலாவுக்கு வெளிநாடுகள் மற்றும் முக்கிய சுற்றுலா இடங்களுக்கு செல்ல மக்கள் தயாராகி வருகிறார்கள். தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக வருகிற 19-ந்தேதி நடைபெற்று முடியும் நிலையில், மே மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை மக்கள் தங்களுடைய சுற்றுலா பயணங்களை திட்டமிட்டு வருகின்றனர்.
இதனால் சென்னையில் இருந்து விமானம் மூலம் சுற்றுலா இடங்களுக்கு செல்ல விமான டிக்கெட்களை முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விமான கட்டணமும் வழக்கத்தைவிட உயர்ந்துள்ளன. அந்தவகையில், விமான கட்டணம் மே மாத மத்தியில் கடுமையாக உயர்ந்துள்ளது. இலங்கைக்கு ரூ.14ஆயிரத்து 500 முதல் ரூ.20 ஆயிரம் வரையும், பாங்காங்-ரூ.25ஆயிரம் முதல் ரூ.29 ஆயிரம் வரை, சிங்கப்பூர்-ரூ.20ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை, துபாய்-ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரத்து 800 வரை, டெல்லி-ரூ.13ஆயிரம் முதல் ரூ.20ஆயிரம் வரை, கோவா-ரூ.7900 முதல் ரூ.26 ஆயிரம் வரை, லட்சத்தீவு-ரூ.23, 500, அந்தமான்-ரூ.13ஆயிரம் முதல் ரூ.15,800 வரையும் கட்டணம் உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
Readmore: CBSE அதிரடி!… 11-12 ஆம் வகுப்புக்கான தேர்வு வடிவத்தில் மாற்றம்!… நடப்பு கல்வியாண்டு முதல் அமல்!