சபரிமலையில் அதிர்ச்சி..!! மாலை அணிவித்து கோயிலுக்கு வந்த தமிழக பக்தர் தற்கொலை..!! வைரலாகும் வீடியோ..!!
மாலை அணிவித்து ஐயப்பன் கோயிலுக்கு சென்ற பக்தர் திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் ஏராளமான பக்தர்கள் சென்று வருவது வழக்கம். கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலையில் இருக்கும் ஐயப்ப சாஸ்தா, தமிழ்நாடு மட்டுமல்லாது தெலங்கானா, ஆந்திரா மாநிலத்திலும் தனது பக்தர்களை கொண்டுள்ளார். இந்நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான சபரிமலை சன்னிதான தரிசனத்திற்கு கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், நேற்று பெரும் அசம்பாவிதம் ஒன்று அங்கு நடந்தது. பக்தர்களுக்கு நெய் பிரசாதம் வழங்கும் பகுதியில், சபரிமலைக்கு மாலை அணிவித்து வந்திருந்த பக்தர் ஒருவர், திடீரென கட்டிடத்தின் மேல் பகுதிக்கு சென்று கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
அவர் உயிருக்கு ஆபத்தான இருந்த அவரை மீட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சில நிமிடங்களிலேயே அவரது உயிர் பிரிந்தது. இந்த சம்பவம் சக பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்கொலை செய்து கொண்டவர் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெகன் சம்பத் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : SBI வங்கியில் 13,735 காலிப்பணியிடங்கள்..!! மாத சம்பளம் ரூ.64,480 வரை..!! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!!