அண்ணாநகரில் அதிர்ச்சி..!! மாடு முட்டி தூக்கி வீசியதில் முதியவர் பலி..!! பொதுமக்கள் அச்சம்..!!
சென்னை அண்ணாநகர் நடுவாங்கரையில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (76). இவர், நேற்று மாலை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்து கொண்டிருந்த மாடு திடீரென முட்டி தூக்கி வீசியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஆறுமுகம், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த ஆறுமுகத்தின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே இதே போன்று திருவல்லிக்கேணி மற்றும் நங்கநல்லூர் பகுதியில் மாடு முட்டி இருவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அண்ணாநகரில் பகுதியில் மாடு முட்டி மேலும் ஒரு முதியவர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.