இல்லத்தரசிகளுக்கு பேரதிர்ச்சி..!! எண்ணெய் விலை அதிரடி உயர்வு..!! ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா..?
மளிகைக் கடைகளில் உயர்த்தப்பட்ட திடீர் எண்ணெய் விலையைக் கேட்டுப் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணை போன்றவை லிட்டருக்கு ரூ.30 வரை உயர்ந்துள்ளது. சில்லரை வியாபாரிகள் மொத்த வியாபாரிகளிடம் எண்ணெய் ஆர்டர் கொடுக்கும்போது விலையேற்றத்தை கூறியதோடு மட்டுமின்றி, மேலும் விலை உயர வாய்ப்புள்ளது. மளிகைக் கடைகளில் உயர்த்தப்பட்ட திடீர் எண்ணெய் விலையைக் கேட்டுப் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மளிகை கடை வியாபாரிகள் கூறுகையில், எல்லா எண்ணெய் வகைகளும் 3 நாட்களில் உயர்ந்துவிட்டன. மத்திய அரசின் இறக்குமதி வரி உயர்வால் இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பண்டிகை காலம் என்பதால் எண்ணெய் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஓட்டல்களில், இனிப்பு, காரம் தயாரிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் பாமாயில் விலை உயர்வு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள எண்ணெய் உற்பத்தி நிறுவனம் தரப்பு கூறுகையில், இறக்குமதி வரியின் காரணமாக அனைத்து எண்ணெய் வகைகளும் உயந்துள்ளன. பாமாயில் விலை 10 பாக்கெட்டுகள் கொண்ட பெட்டிக்கு ரூ.100 உயர்ந்தது. தீப எண்ணெய் பெட்டி ரூ.1035-ல் இருந்து ரூ.1230 ஆக உயர்ந்தது. அதேபோல், கடலைப் பருப்பு விலை கிலோவிற்கு 15 ரூபாய் உயர்ந்துள்ளது. அதாவது ரூ.90-க்கு விற்க கடலைப் பருப்பு தற்போது ரூ.105 ஆக உயர்ந்துள்ளது. பச்சை பட்டாணி, வெள்ளை மூக்கடலை ஆகியவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.
Read More : மனைவியை வேறொருவருடன் செக்ஸ் வைத்துக் கொள்ள வற்புறுத்தும் கணவன்..!! என்ன காரணம் தெரியுமா..?