அதிர்ச்சி!. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!. உணவு, நீரின்றி குவைத்தில் தவிக்கும் இந்திய பயணிகள்!.
Kuwait Airport: விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக குவைத்தில் தரையிறக்கப்பட்டதால் பல மணிநேரமாக உணவு, நீரின்றி இந்திய பயணிகள் தவித்து வருகின்றனர்.
மும்பையில் இருந்து மான்செஸ்டர் செல்லும் கல்ஃப் ஏர் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக குவைத் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமான எஞ்சினில் இருந்து புகை வருவதாக கிடைத்த தகவலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 60 இந்திய பயணிகள் 23 மணி நேரமாக விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு உட்கார போதிய இடமோ, உணவு, தண்ணீரோ வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகளுடன் பயணிகள் வாக்கு வாதம் செய்யும் வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றன. இந்திய பயணிகள் வேண்டுமென்றே தவறாக நடத்தப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அதே நேரத்தில், பயணிகளுக்கு உதவி அல்லது பிரச்சனைக்கு தீர்வு குறித்து கல்ஃப் ஏர் நிறுவனத்திடம் இருந்து இதுவரை உறுதியான அறிக்கை எதுவும் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
தற்போது வளைகுடா ஒத்துழைப்பு உச்சி மாநாடு நடைபெற்று வருவதால் அந்த ஹோட்டல்களில் இடம் இல்லை. வருகை தந்ததும் விசா பெறும் வசதியின் கீழ் இந்தியர்கள் வரமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.