புதுசு புதுசா கிளம்பும் வைரஸ்!. கேரளாவில் முதியவர் பாதிப்பு!. முரைன் டைபஸ் நோய் என்றால் என்ன?. அறிகுறிகள் இதோ!
Murine Typhus: கேரளாவைச் சேர்ந்த 75 வயது முதியவருக்கு கடந்த அக்.11 வெள்ளிக்கிழமை அன்று முரைன் டைபஸ் என்ற அரிய பாக்டீரியா நோய் கண்டறியப்பட்டது. சமீபத்தில் அவர் வியட்நாம் மற்றும் கம்போடியாவுக்குச் சென்று திரும்பியபோது கடுமையான உடல் வலி மற்றும் சோர்வை உணர்ந்தார். இதையடுத்து, கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முதியவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என தெரியவந்துள்ளது. மேலும், முரைன் டைபஸ் தொற்றுக்கான பரிசோதனையில் நோய் தொற்று இல்லை என முடிவுகள் வெளிவந்தது. பின்னர், அவரது இரத்த மாதிரிகள் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் சோதனை செய்யப்பட்ட நிலையில், முரைன் டைபஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
முரைன் டைபஸ் என்றால் என்ன? நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் படி, Rickettsia typhi எனும் பாக்டீரியா மனிதர்களில் முரைன் டைபஸ் (எண்டெமிக் டைபஸ்) ஏற்படுவதற்கான காரணியாகும். எலிகள் மற்றும் பிளே (Flea) மூலம் R. typhi ஏற்படுகின்றன. இந்த நோய்த்தொற்று அதிக நெரிசல், மாசுபாடு மற்றும் மோசமான சுகாதாரத்துடன் இருக்கும் இடங்களுடன் தொடர்புடையது என தெரியவந்துள்ளது.
முரைன் டைபஸ் எவ்வாறு பரவுகிறது? பாதிக்கப்பட்ட பிளேவின் மலம் தோலில் வெட்டு அல்லது கீறலுடன் தொடர்பு கொள்ளும்போது இந்த நோய் பரவுகிறது. இந்தியாவில், வடகிழக்கு, மத்தியப் பிரதேசம் மற்றும் காஷ்மீரில் இதுபோன்ற அரிய பாக்டீரியா தொற்றுகள் பதிவாகியுள்ளன.
காய்ச்சல், தலைவலி மற்றும் தண்டுவடப் பகுதியில் சொறி போன்ற அறிகுறிகளை கொண்டுள்ளது. சில நேரங்களில், கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் அல்லது மூளையில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இந்த தொற்று அறிகுறி டெங்கு காய்ச்சலுக்கு ஒத்திருப்பதும் தெரியவந்துள்ளது.
Readmore: வந்தே பாரத் ரயிலில் லக்கேஜ் தொலைந்துவிட்டதா?. இழப்பீடு பெறுவது எப்படி?.