முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஷாக்!. தோனி ஓய்வு!. உள்ளே வரும் DC வீரர்!. கேப்டன் இவர்தான்!. ஐபிஎல் 2025-க்கான சிஎஸ்கேவின் மாற்றங்கள்!

MS Dhoni Retires! Rishabh Pant IN; Ruturaj Gaikwad Replaced As Captain: Predicted Changes At CSK For IPL 2025
06:51 AM Sep 11, 2024 IST | Kokila
Advertisement

CSK: எப்போதுவேண்டுமானாலும் தோனி ஓய்வை அறிவிக்கலாம் என்று கூறப்படும் நிலையில், 2025 ஐபிஎல் ஏலத்தில் ரிஷப் பந்தை சிஎஸ்கே அணி எடுக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளன.

Advertisement

ஐபிஎல் 2025 சீசனில் MS தோனி தொடர்ந்து விளையாடுவாரா என்பது எப்போதுமே மிகப்பெரிய கேள்வியாக இருந்துவருகிறது. முந்தைய சீசனில் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகிய நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக பொறுப்பேற்று அணியை வழிநடத்தினார். இந்தநிலையில், அடுத்த 2025ம் ஆண்டு சீசனில் சிஎஸ்கே கேம்ப்பில் சில மாற்றங்களைக் காணலாம். ஐந்தாண்டுகளுக்கு ஓய்வு பெற்ற ஒரு வீரரைத் தொடரப்படாத வீரராக அறிவிக்கும் விதியை மீண்டும் அறிமுகப்படுத்தியதன் மூலம் தோனியை சிஎஸ்கே தக்கவைத்துக் கொள்ளக்கூடும் என்று பல தகவல்கள் வந்துள்ளன.

இருப்பினும், எப்போதுவேண்டுமானாலும் தோனி ஓய்வை அறிவிக்கலாம் என்று கூறப்படும் நிலையில், CSK-க்கு நிச்சயமாக ஒரு புதிய விக்கெட் கீப்பர்-பேட்டர் தேவை. இந்தநிலையில், 2025 ஐபிஎல் ஏலத்தில் ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸால் விடுவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதனடிப்படையில் தோனிக்கு மாற்றாக ரிஷப் பந்தை 2025 ஏலத்தில் சிஎஸ்கே எடுக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எம்எஸ் தோனிக்கு பதிலாக ரிஷப் பண்ட் வந்தால், சிஎஸ்கே கேப்டன்சியில் மாற்றம் நிகழலாம். ஐபிஎல் 2024 சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டார், ஆனால் வரலாற்றில் மூன்றாவது முறையாக பிளேஆஃப்களுக்குச் செல்ல தவறியதால் அவரால் எதிர்பார்த்த அளவுக்குச் செயல்பட முடியவில்லை. ரிஷப் பந்தை சிஎஸ்கே வாங்கினால், அவர் கேப்டனைத் தவிர வேறு எதையும் ஏற்கமாட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Readmore: பழைய வாகனங்களை இனி ஸ்கிராப்பிங் செய்ய வேண்டாமா?. புதிய கொள்கைக்கு திட்டமிடும் மத்திய அரசு!

Tags :
CSKipl 2025MS Dhoni RetiresPredicted Changesrishabh pantruturaj gaikwad
Advertisement
Next Article